For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"எங்க நாட்டில் கொரோனா குறைந்துவிட்டது" கட்டுப்பாடுகளை மொத்தமாக தூக்கிய இந்தோனேஷியா!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: சீனாவில் பரவும் புதிய வகை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தோனேசியாவில் கொரோனா குறைந்துவிட்டதால் அந்நாட்டில் கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விடத்தொடங்கிய நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் மின்னல் வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியது.

சீனாவின் ஜிரோ கோவிட் பாலிசிக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் வெகுண்டெழுந்து போராட்டத்தை தொடங்கியதால் கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்திவிட்டது. இதனால், சீனாவில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் பரவியது.

அச்சுறுத்தும் கொரோனா கேஸ்கள்.. சீனா உடனே விளக்கம் அளிக்க வேண்டும்.. உலக சுகாதார நிறுவனம் அதிரடி அச்சுறுத்தும் கொரோனா கேஸ்கள்.. சீனா உடனே விளக்கம் அளிக்க வேண்டும்.. உலக சுகாதார நிறுவனம் அதிரடி

 மீண்டும் வேகமெடுத்த கொரோனா

மீண்டும் வேகமெடுத்த கொரோனா

ஒமிக்ரானின் புதிய வேரியண்டான பிஎப் 7 வகை கொரோனாவே சீனாவில் அதிகவேகமாக கொரோனா பரவுவதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. ஒருவரிடம் இருந்து 16 பேருக்கு பரவும் தீவிர தன்மையை இந்த வைரஸ் கொண்டதால் சீனாவின் அண்டை நாடுகளுக்கும் வெகு வேகமாக இந்த வைரஸ் பரவி விட்டது. இதனால், உஷாரான உலக நாடுகள் சீனாவில் இருந்து பயணிகளுக்கு உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியிருக்கின்றன.

 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை

பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை

ஜப்பான், அமெரிக்கா, கொரியா, பிரேசில் போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகரித்து மக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன. சர்வதேச பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நடைமுறை மீண்டும் தொடங்கியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் மக்களின் மாதிரிகளை மரபணு பகுப்பாய்வு சோதனை செய்து எந்த வகை கொரோனா என்று கண்டறிய வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதேபோல கொரோனாவின் பாதிப்பு ஏற்படுத்திய தாக்கத்தை நன்கு உணர்ந்த உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

 கட்டுப்பாடுகள் நீக்கம்

கட்டுப்பாடுகள் நீக்கம்

பெரும்பாலான நாடுகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் இந்தோனேசியாவோ நேர்மாறாக கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கி அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டின் அதிபர் ஜோகோ விடோகடா உத்தரை பிறப்பித்து இருக்கிறார். இந்தோனேசியாவில் கடந்த ஏப்ரல் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி கொரோனா தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டு இருந்தது.

எதிர்ப்பு சக்தி கிடைத்துவிட்டதால்

எதிர்ப்பு சக்தி கிடைத்துவிட்டதால்

அதன்முதல் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டதாக கூறி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. அதாவது, இந்தோனேசியாவில் 10 லட்சம் பேரில் 1.7 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. பெரும்பாலான மக்களுக்கு கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துவிட்டதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக இந்தோனேசியா அதிபர் அறிவித்துள்ளார்.

இந்தோனேசிய மக்கள் மகிழ்ச்சி

இந்தோனேசிய மக்கள் மகிழ்ச்சி

மக்கள் கூட்டமாக கூடுவதற்கும் வெளியில் செல்வதற்கும் எந்த வித கட்டுப்பாடுகளும் கிடையாது என்றும் இந்தோனேசிய அரசு அறிவித்துள்ளதால் இந்தோனேசிய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேவேளையில் சீனாவில் பரவும் புதிய வகை கொரோனாவால் உலக நாடுகள் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில் இந்தோனேசியாவில் கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

English summary
Due to the threat of a new type of corona spreading in China, restrictions and measures to prevent corona have been intensified in various countries including India, but the corona restrictions have been completely removed in Indonesia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X