For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

500ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை.. திணறும் சீனா.. 24324 பேர் மருத்துவமனையில்.. கொரோனா விஸ்வரூபம்!

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் பலி எண்ணிக்கை 490ஐ தொட்டது.

Google Oneindia Tamil News

Recommended Video

    திடீர் வேகமெடுத்தது கொரோனா... பலி எண்ணிக்கையும் உயர்ந்தது | Coronavirus beats Sars in China

    பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் பலி எண்ணிக்கை 490ஐ தொட்டது. இன்று பிற்பகலில் இந்த எண்ணிக்கை 500ஐ தாண்டும் என்று அஞ்சப்படுகிறது.

    உலகம் மொத்தத்தையும் சீனாவின் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைக்க தொடங்கி உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த முடியவில்லை என்று சீன அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

    அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளிடம் இதனால் சீனா உதவி கேட்க தொடங்கி உள்ளது. சீனாவில் வுஹன் நகரத்தில் தோன்றிய இந்த வைரஸ் ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவ கூடியது.

    5 ரத்த மாதிரியிலும் வைரஸ் இல்லை.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கிடையாது.. சுகாதாரத்துறை குட் நியூஸ்! 5 ரத்த மாதிரியிலும் வைரஸ் இல்லை.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கிடையாது.. சுகாதாரத்துறை குட் நியூஸ்!

    எப்படிப்பட்ட வைரஸ்

    எப்படிப்பட்ட வைரஸ்

    சீனாவின் வுஹன் நகரத்தில் இந்த வைரஸ் தோன்றி இருந்தாலும் கூட, சீனாவின் மற்ற நகரங்களுக்கும் இந்த வைரஸ் பரவி விட்டது. வுஹன் நகரம் இந்த வைரஸ் காரணமாக மொத்தமாக மூடப்பட்டது. தற்போது சீனாவில் மொத்தம் நான்கு நகரங்கள் மூடப்பட்டுள்ளது. ஆனால் இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. அண்டை நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி உள்ளது.

    மொத்தம் எத்தனை

    மொத்தம் எத்தனை

    மொத்தம் 22 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி உள்ளது. இந்தியாவில் கேரளாவில் மூன்று பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இது தொட்டால் பரவும் வைரஸ் ஆகும். சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் புதிய வகை வைரஸ் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். கொரோனா வைரஸின் வேறு ஒரு வகைதான் சார்ஸ் நோயை சீனாவில் உண்டாக்கியது.

    அறிகுறிகள்

    அறிகுறிகள்

    இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக லேசான ஜலதோஷம் ஏற்படும். அதன்பின் குளிர் நடுக்கம் ஏற்படும். பின் இது நெஞ்சு வலியை உருவாக்கும். கடைசியில் இது மொத்தமாக உயிரையே குடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு ஆட்கொல்லி நோய் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மிக கொடுமையான நெஞ்சுவலி ஏற்படும். இந்த நெஞ்சுவலி சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    பலி எண்ணிக்கை

    பலி எண்ணிக்கை

    இந்த வைரஸ் காரணமாக சீனாவில் நேற்று மட்டும் 30 பேர் வைரஸ் மூலம் பலியானார்கள். தினம் தினம் இதனால் பழி எண்ணிக்கை கூடி வருகிறது. கடந்த மூன்று நாட்களில் சீனாவின் ஹூபே நகரத்தில் மட்டும் இதனால் 65 பேர் பலியாகி உள்ளனர். மொத்தம் 24324 பேர் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 490ஐ தொட்டு இருக்கிறது.

    எத்தனை பேர்

    எத்தனை பேர்

    நேற்று மட்டும் புதிதாக 3884 பேருக்கு இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இன்று பலி எண்ணிக்கை கண்டிப்பாக 500 ஐ தொட்டுவிடும் என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். பலி எண்ணிக்கையின் அடிப்படையில் சார்ஸை கொரோனா முந்திவிட்டது. இந்த வைரஸ் பிளேக் போல உருவெடுக்கலாம் என்று கூறுகிறார்கள். அதேபோல் இந்த வைரஸ் காரணமாக, எச்1என்1 அளவிற்கு பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறுகிறார்கள்.

    English summary
    Coronavirus attack, Death toll reaches 490 and 24324 in the hospital so far.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X