For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா: இத்தாலியில் தொடரும் துயரம்- ஒரேநாளில் 602 பேர் பலி- உலகம் முழுவதும் 15,400 பேர் உயிரிழப்பு

Google Oneindia Tamil News

ரோம்: கொரோனாவின் தாக்குதலில் இத்தாலி நாட்டில் துயரம் தொடருகிறது. இத்தாலியில் நேற்று ஒரேநாளில் 602 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கொரோனாவால் இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை 6,077 ஆக அதிகரித்துள்ளது.

Recommended Video

    தீவிர கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை பயன்படுத்தலாம் - இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் குழு

    சீனாவை தொடர்ந்து இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா மனித உயிர்களை பல்லாயிரக்கணக்கில் குடித்து வருகிறது. இத்தாலில் ஒரே நாளில் பல நூறு பேர் பலியாவது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 500, பலி எண்ணிக்கை 10; 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் லாக் டவுன்! கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 500, பலி எண்ணிக்கை 10; 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் லாக் டவுன்!

    இத்தாலியில் 602 பேர் பலி

    இத்தாலியில் 602 பேர் பலி

    இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 602 பேர் பலியாகி உள்ளனர். அந்நாட்டில் கொரோனாவுக்கு இதுவரை 6,077 பேர் பலியாகி உள்ளனர். இருப்பினும் நேற்று முன்தினத்தை ஒப்பிடுகையில் இத்தாலியில் உயிரிழப்பு சற்று குறைவு. உலக நாடுகளில் இத்தாலியில்தான் கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.

    பிரான்ஸில் 186 பேர் பலி

    பிரான்ஸில் 186 பேர் பலி

    இத்தாலியைத் தொடர்ந்து பிரான்சில் நேற்று ஒரே நாளில் 186 பேர் பலியாகினர். அந்நாட்டில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 860 ஆக அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 100 பேர் பலியான நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 500ஐ எட்டியிருக்கிறது.

    இங்கிலாந்து, நியூசிலாந்து

    இங்கிலாந்து, நியூசிலாந்து

    இங்கிலாந்தில் நேற்று ஒரேநாளில் 46 பேர் பலியாகினர். அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 303. செனகல், ஐவரி கோஸ்ட் ஆகிய நாடுகளில் அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்தியுள்ளன. நியூசிலாந்தில் நாளை மறுநாள் முதல் முழுமையான லாக் டவுன் அமல்படுத்தப்படுகிறது.

    துருக்கியில் கடும் பாதிப்பு

    துருக்கியில் கடும் பாதிப்பு

    துருக்கியில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 37 ஆக கிடுகிடுவென அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 293-ல் இருந்து 1,529 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் துருக்கியில் கொரோனாவின் தாக்கம் வெகுவேகமாக அதிகரித்திருக்கிறது. சைப்ரஸ் நாட்டில் ஏப்ரல் 13- ந் தேதி வரை லாக் டவுன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அல்ஜீரியாவில் தலைநகர் அல்ஜீயர்ஸில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

    English summary
    Italy has reported 602 new deaths from the coronavirus on yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X