சீசனுக்கு சீசன் தாக்குமா? பருவகால நோயாக மாறுகிறதா கொரோனா? உலக சுகாதார அமைப்பு பரபர தகவல்
ஜெனீவா: ‛‛கொரோனா இன்னும் முடியவில்லை எனவும், அதிர்ஷ்டவசமாக பருவகால நோயாக கொரோனா மாறவில்லை'' என்பன உள்பட பல்வேறு விஷயங்களை உலக சுகாதார அமைப்பு விளக்கியுள்ளது.
கொரோனா பரவல் இந்தியாவில் தற்போது குறைந்து வருகிறது. மத்திய அரசின் அறிவுரைப்படி கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கும் முறை கைவிடப்பட்டுள்ளது.
இருப்பினும் சீனா உள்பட இன்னும் சில நாடுகளில் கொரோனா பாதிப்பு உள்ளது. சில இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அவ்வப்போது உலக சுகாதார நிறுவனம் கொரோனா பரவல் குறித்து மக்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறது.

இன்னும் முடியல
அதன்படி உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோசு அதானோம் கொரோனா பரவல் குறித்து சில முக்கிய விஷயங்களை கூறியுள்ளார். அவர் கூறியதாவது: ‛‛கொரோனா பரவலில் உலகம் தற்போது துவக்க கட்டத்தை தான் தாண்டி உள்ளது. கொரோனா வைரஸின் நிலைத்திருக்கும் தன்மை, பரவல் வேகம், தீவிரத்தன்மை தற்போது வரை குறைந்ததாக தெரியவில்லை. இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை உலக நாடுகள் கைவிட்டு இருப்பது கவலையளிக்கிறது. கடந்த 30 நாட்களில் ஏற்பட்ட பாதிப்புகளில் 99.2 சதவீதம் பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா இன்னும் முடியவில்லை. தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டும்'' என்றார்.

யாரும் நம்ப வேண்டாம்
உலக சுகாதார அமைப்பின் அவசர நிலை பிரிவின் திட்ட இயக்குனர் மைக்கேல் ரியான் கூறுகையில், ‛‛கொரோனா பரவல் இன்னும் முடியவில்லை. பரவல் வேகம், பாதிப்பு சதவீதம் குறைந்தால் வைரஸ் ஒழிந்துவிட்டது என அர்த்தமாகாது. இதனால் விழிப்புடன் இருக்க வேண்டும் கொரோனா பேரிடர் முடிந்துவிட்டது என யாரும் நம்ப வேண்டாம்.

பருவகால நோயா கொரோனா
இருப்பினும் அதிர்ஷ்டவசமாக என்டமிக் நிலையை கொரோனா எட்டவில்லை. காசநோய், மலேரியா போன்று உள்ளூர் நோயாகவும், பருவகாலத்தில் பரவும் நோயாகவும் மாறவில்லை. 2020ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான காலத்தை எடுத்து கொண்டால் கடந்த ஒரு வாரத்தில் தான் குறைந்தபட்ச இறப்பு பதிவாகி உள்ளது. இருப்பினும் இது 20,000க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இந்த பலி எண்ணிக்கை வரும் நாட்களில் குறைய வேண்டும்'' என்றார்.
Recommended Video

விழிப்புடன் தடுப்பு நடவடிக்கை
உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறுகயைில், ‛‛கொரோனா பரவல் துவங்கி தற்போது வரை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி பேரழிவை உருவாக்கி உள்ளது. நாம் இன்னும் கொரோனா பரவலின் மத்தியில் தான் இருக்கிறோம். இதனால் அலட்சியம் கூடாது. விழிப்புணர்வுடன் தடுப்பு நடவடிக்கை தேவை'' என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications