"DARK Mode ஆக்டிவேட்". . கச்சா எண்ணெயுடன் மும்பை வந்த கப்பல்.. ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது எப்படி? திக்திக்
டெல்லி: ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய பிறகு சவுதி அரேபியாவில் இருந்து 1 லட்சத்து 35 ஆயிரத்து 335 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயுடன் முதல் கப்பலாக 'ஷன்லாங் சூயஸ்மேக்ஸ்' கப்பல் பத்திரமாக மும்பை வந்துள்ளது. இந்த கப்பலை நம் நாட்டை சேர்ந்த கேப்டன் இயக்கினார். போர் பதற்றம் நிறைந்த ஹார்முஸ் ஜலசந்தியை இந்த கப்பல் 'டார்க் மோட்' முறையில் கடந்துள்ளது. இந்த 'டார்க் மோட்' என்பது என்ன? அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
அமெரிக்கா - இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது போரை தொடங்கி உள்ளன. இதனால் ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்தது. இது ஒரு கடல் வழிப்பாதையாகும். இந்த கடல்வழிப்பாதை வழியாக தான் உலகளவில் நடக்கும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதம் வரை நடக்கும்.

சவுதி அரேபியா, கத்தார், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ஈராக் உள்பட பிற மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் கச்சா எண்ணெய், கேஸ் கொண்டு வரப்படும்.
ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் இந்த நாடுகளில் இருந்து இந்தியா, சீனா உள்பட நம்முடைய பிற அண்டை நாடுகளுக்கான கச்சா எண்ணெய், கேஸ் விநியோகம் பாதிக்கப்பட்டது. மேலும் ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் கப்பல்களை ஈரான் தாக்கி வருகிறது. இதனால் நம் நாட்டுக்கு வர வேண்டிய கப்பல்கள் வரவில்லை.
இந்திய கப்பல்களுக்கு அனுமதி
ஹார்முஸ் ஜலசந்திக்கு முன்பாக பாரசீக வளைகுடா கடல் பகுதியில் இந்திய கொடியுடன் 28 கப்பல்கள் வலம் வருகின்றன. இதில் 24 கப்பல்களில் 677 இந்திய மாலுமிகள் ஹார்முஸ் ஜலசந்திக்கு மேற்கில் உள்ள நிலையில், மீதமுள்ள நான்கு கப்பல்களில் 101 இந்திய மாலுமிகள் ஜலசந்திக்குக் கிழக்கில் உள்ளனர்.
இந்த கப்பல்களை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு ஈரானிடம் பேசியது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சிடம் பேசிய நிலையில் இந்திய கொடியுடன் கூடிய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரான் அனுமதி வழங்கி உள்ளது.
மும்பை வந்த எண்ணெய் கப்பல்
அதன்படி முதல் கப்பலாக 'ஷன்லாங் சூயஸ்மேக்ஸ்' எனும் எண்ணெய் கப்பல் மும்பைக்கு முதல் கப்பலாக வந்துள்ளது. இந்த கப்பல் சவுதி அரேபியாவில் இருந்து 1.35 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை ஏற்றி கொண்டு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மும்பையை அடைந்துள்ளது. இதற்கிடையே தான் தான் இந்த 'ஷன்லாங் சூயஸ்மேக்ஸ்' எண்ணெய் கப்பல் போர் பதற்றம் நிறைந்த ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது எப்படி? என்பது தொடர்பான பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏஐஎஸ் சிஸ்டம்
அதாவது கப்பல்கள் நீண்டதூரம் கடலில் பயணிக்கும். இதனால் கடலில் ஒவ்வொரு கப்பல்களின் இருப்பிடத்தையும் அறிய ஏஐஎஸ் எனும் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை ஆங்கிலத்தில் Automatic Identification System (AIS) என்பார்கள். இது ரேடியோ அலைகளை உருவாக்கி வெளியிடும். ஏஐஎஸ் சிஸ்டம் என்பது கப்பலின் பாதுகாப்புக்கான கருவியாகும். இதனை ஆன் செய்து தான் ஒவ்வொரு கப்பல்களும் கடலில் பயணிக்கும்.
இது ரேடியோ அலைகளை வெளியிடும். இந்த அலைகளை கடற்கரையில் உள்ள கண்காணிப்பு நிலையங்கள், செயற்கைகோள்கள், பிற கப்பல்களில் உள்ள ஏஐஎஸ் சிஸ்டம்கள் பெறும். இதன்மூலம் குறிப்பிட்ட அந்த கப்பலின் பெயர், நீளம், அகலம், செல்லும் இடம், எந்த வகையான பொருட்களை ஏற்றி செல்கிறது, எவ்வளவு தூரத்தில் எவ்வளவு வேகத்தில் பயணிக்கிறது என்பது போன்ற விஷயங்களை மற்றவர்களால் உணர்ந்து கொள்ள முடியும். இதனால் கடலில் கப்பல்கள் ஒன்றோடொன்று மோதுவது தடுக்கப்படும்.
ஏஐஎஸ் சிஸ்டம் 'ஆஃப்'
அதன்படி சில நாட்களுக்கு முன்பு தற்போது 'ஷன்லாங் சூயஸ்மேக்ஸ்' என்ற எண்ணெய் கப்பல் சவூதி அரேபியாவின் ராஸ் தனுரா துறைமுகத்தில் 1,35,335 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை ஏற்றியது. இந்த கப்பல் அங்கிருந்து மும்பைக்கு புறப்ட்டது. இந்த கப்பல் மும்பைக்கு வர வேண்டும் என்றால் ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க வேண்டும்.
கடந்த 9 ம் தேதி ஹார்முஸ் ஜலசந்தியை நெருங்கியது. அதன்பிறகு 'ஷன்லாங் சூயஸ்மேக்ஸ்' கப்பலில் இருந்து சிக்னல் யாருக்கும் கிடைக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் கப்பலின் ஏஐஎஸ் சிஸ்டம் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. இதனை 'டார்க்மோட்' என்பார்கள். இந்த கப்பலின் நகர்வை யாருக்கும் தெரியாத வகையில் இந்த கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளது. அதன்பிறகு ஒருநாள் கழித்து இந்த கப்பல் மும்பையை அடைந்துள்ளது.
இந்திய கேப்டன் இயக்கினார்
இந்த கப்பலை இந்தியாவை சேர்ந்த கேப்டன் தான் இயக்கி உள்ளார். சவுதியில் இருந்து இந்த கப்பலில் கொண்டு வரப்பட்ட 1 லட்சத்து 35 ஆயிரத்து 335 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் மும்பையில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு பிரித்து வழங்கப்பட உள்ளது. இதுபற்றி TankerTrackers.com எனும் கப்பல்களின் கண்காணிப்பு இணையதளம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
அதில், '' இரண்டு மிகப் பெரிய கச்சா எண்ணெய் கப்பல்கள் (VLCCs), மூன்று சூயஸ்மேக்ஸ் எண்ணெய் கப்பல் மற்றும் ஒரு பனாமாக்ஸ் டேங்கர் என மொத்தம் ஆறு கப்பல்கள் கடந்த 48 மணிநேரத்துக்குள்ளாக ஏஐஎஸ் சிஸ்டம் கண்காணிப்பை துண்டித்துள்ளது. இந்த கப்பல்கள் சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளை நோக்கி சென்றுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.
-
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
அயதுல்லா அலி கமேனியின் மகனையும் முடித்த இஸ்ரேல்? உண்மையில் அதிகாரம் யாரிடம்? ஓங்கும் ஐஆர்ஜிசி கை! -
முடங்கும் அமேசான் சேவைகள்? ஈரான் சரமாரி ‘அட்டாக்’.. பற்றி எரியும் பஹ்ரைனால் டிரம்புக்கு பிரஷர் -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை












Click it and Unblock the Notifications