For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இங்கிலாந்தில் குடியேறும் இந்தியர்கள் எண்ணிக்கை குறைகிறது!

By Mathi
Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்துக்கு படிக்கவும் பணிபுரியவும் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது;

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேச நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்து சென்று படிப்பதும் பணிபுரிவதும் அதிகரித்து வந்தது. ஆனால் அண்மைய ஆய்வு ஒன்றில் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

2011-ல் எத்தனை பேர்?

2011-ல் எத்தனை பேர்?

இங்கிலாந்தின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2011ஆம் ஆண்டு டிசம்பர் வரை இந்தியா உட்பட புதிய காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த 1,51,000 பேர் இங்கிலாந்துக்கு குடியேறி இருந்தனர்.

2012ல் குறைந்தது

2012ல் குறைந்தது

ஆனால் 2012ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 97 ஆயிரமாக குறைந்துள்ளது.

கெடுபிடிகளே காரணம்

கெடுபிடிகளே காரணம்

இந்திய துணைக் கண்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் இங்கிலாந்தில் படிப்புக்காக விண்ணப்பிக்கும் போது கெடுபிடிகள் அதிகரிப்பதாலேயே அந்நாட்டுக்கு செல்வோர் எண்ணிக்கை குறைந்திருக்கலாம் என கருதப்படுகிறது/

யுஎஸ், ஆஸி.யைவிட ...

யுஎஸ், ஆஸி.யைவிட ...

இதேபோல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை விட கல்விக் கட்டணமும் இங்கிலாந்தில் அதிகம் என்பதும் ஒரு காரணமாகும்.

படிக்க வந்தவர்கள் எண்ணிக்கை

படிக்க வந்தவர்கள் எண்ணிக்கை

படிப்பதற்காக கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றோர் எண்ணிக்கை 2,32,000. ஆனால் நடப்பாண்டிலோ 1,80,000தானாம்.

14 ஆண்டுகளில் குறைவு

14 ஆண்டுகளில் குறைவு

கடந்த 14 ஆண்டுகளில் நடப்பாண்டில்தான் வெளிநாட்டினர் இங்கிலாந்தில் குடியேறுவது கணிசமாக குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
The number of Indians coming into Britain to work and study has registered a significant drop over the past year, according to official figures released today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X