உச்சிக்கேறிய போதை! சுற்றுலா பயணியின் காதை கடித்து விழுங்கிய பாலியல் தொழிலாளி! தாய்லாந்தில் ஷாக்
பாங்காக்: தாய்லாந்து நாட்டில் உச்சிக்கேறிய போதையில் சுற்றுலா பயணியின் காதை கடித்து பெண் பாலியல் தொழிலாளி விழுங்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
உலகில் ஆங்காங்கே அவ்வப்போது விசித்திரமான குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றனர். இதனை சிலர் தெரிந்து செய்வதோடு சிலர் தெரியாமல் செய்வது வித்தியாசமானதாக மாறிவிடுகிறது.
அந்த வகையில் தான் தற்போது தாய்லாந்து நாட்டில் விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

பாலியல் தொழிலாளி
தாய்லாந்தில் வசித்து வருபவர் கன்னிகா காம்டன்(வயது 25). இவர் பாலியல் தொழிலாளியாக உள்ளார். இவருக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று கன்னிகா அதிகளவில் மதுபானம் குடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் போதை தலைக்கேறிய நிலையில் அவரால் நடக்க முடியவில்லை.

சுற்றுலா பயணியுடன் பயணம்
இதைடுத்து அவர் பட்டாயா பகுதியில் உள்ள சின்சிட்டியில் பஸ்சில் ஏறினார். இந்த பஸ்சில் 55 வயது நிரம்பிய சுற்றுலா பயணி அமர்ந்திருந்தார். அவர் அருகே கன்னிகா அமர்ந்தார். அப்போது சுற்றுலா பயணியை திடீரென்று கன்னிகா முறைத்தார். மேலும் தனது பல்லை கடித்து அவர் கோபத்தை கொப்பளித்தார்.

காதை கடித்த பெண்
இந்த வேளையில் திடீரென்று கன்னிகா சுற்றுலா பயணியின் காதை பலமாக கடித்தார். இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். இதையடுத்து சக பயணிகள் அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
மேலும் சம்பவம் குறித்து சுற்றுலா பயணி சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர்.

போலீஸ் மீதும் தாக்குதல்
இதுபற்றி போலீஸ் லெப்டினென்ட் கர்னல் சாய்ஜாய் காம்சுலா கூறுகையில், ‛‛காதை கடித்து விழுங்கிய பெண்ணை கைது செய்துள்ளோம். கைது நடவடிக்கையின்போது அந்த பெண் போலீஸ் அதிகாரியையும் காலால் உதைத்து தாக்கினார். கைதாகி உள்ள பெண் விபசார தொழில் செய்து வருகிறார். இந்த சம்பவத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications