For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐ.நா. சுற்றுச் சூழல் திட்ட உதவி பொதுச் செயலராகிறார் எரிக்சொல்ஹெய்ம்

By Mathi
Google Oneindia Tamil News

ஆஸ்லோ: இலங்கைக்கான நார்வேயின் சமாதானத் தூதராக பணியாற்றிய எரிக் சொல்ஹெய்ம் ஐ.நாவின் சுற்றுச் சூழல் அமைப்புக்கான உதவி பொதுச் செயலராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான 2002-ம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தைக்கு முக்கியமான பங்கு வகித்தவர் எரிக் சொல்ஹெய்ம். இதற்காக சிங்களர்கள் எரிக்சொல்ஹெய்மை கடுமையாக விமர்சித்து வந்தனர். அவரை விடுதலைப் புலிகளின் ஏஜெண்ட் என குற்றம்சாட்டினர்.

Erik Solheim tipped for UN post

நார்வே நாட்டின் அமைச்சராகவும் எரிக்சொல்ஹெய்ம் பதவி வகித்தார். தற்போது ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்பின் உதவி பொதுச்செயலராக எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Norway’s former minister Erik Solheim will take over as head of the United Nations’ Environment Programme (UNEP), with the rank of assistant secretary general.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X