கண்ணை துடைச்சிட்டு பாருங்க.. இது பறவையில்லை.. மரத்தின் மீது கொத்து கொத்தாக ஆடுகள்.. என்னாச்சு?
ரபாட்: மரத்தில் பறவைகள் அமர்ந்திருப்பதை பார்த்திருக்கிறோம்; ஆனால் தரையில் நடமாட வேண்டிய ஆடுகள் மரத்தின் மீது கொத்தாக கொத்தாக நின்றுகொண்டு, பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றன.
இந்த ஆடுகள் இவ்வாறு மரத்தின் மீது நிற்பதற்கும், அதனை அவற்றின் உரிமையாளர்கள் அனுமதிப்பதற்கும் பின்னால் ஒரு சுவாரசியமான கதை இருக்கிறது.
உலகிலேயே இந்த ஒரே ஒரு நாட்டில் மட்டும்தான் ஆடுகள் மரத்தின் மீது நின்றுக் கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடியும்.

மரத்தின் மீது நிற்கும் ஆடுகள்
வடக்கு ஆப்ரிக்காவில் அமைந்துள்ள நாடு மொராக்கோ. மிகவும் வறண்ட நிலப்பகுதியை கொண்டிருக்கும் இந்நாட்டில் பெரும்பாலான மக்களின் பிரதான தொழிலாக இருப்பது கால்நடை வளர்ப்பு தான். இந்நிலையில், இந்தப் பகுதிக்கு அண்மையில் சுற்றுலா சென்ற அமெரிக்கர்கள் சிலர், அங்கு பார்த்த காட்சி அவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. அங்குள்ள மரங்களில் பறவைகளுக்கு பதிலாக பெரிது பெரிதாக ஆடுகள் கொத்து கொத்தாக நின்றுக் கொண்டிருந்தன.

சுவாரசியமான காரணம்
இதை அந்த சுற்றுலா பயணிகள் முதலில் நம்பவே இல்லை. ஏதோ அன்றைக்குதான் அந்த ஆடுகள் இவ்வாறு மரத்தில் ஏறி நிற்பதாக நினைத்த அவர்கள், இதுகுறித்து அந்த ஊர்க்காரர்களிடம் கேட்டனர். ஆனால் அவர்களோ, "மொராக்கோவில் நீங்கள் எங்கு போனாலும் ஆடுகள் இப்படிதான் மரத்தின் மீது நிற்கும்" எனக் கூறினர். மேலும், அடுகளின் இந்த செயல்களுக்கும், அதை அவற்றின் உரிமையாளர்கள் அனுமதிப்பதற்கும் பின்னால் உள்ள காரணம், மேலும் சுவாரசியமானதாக இருந்தது.

ஆர்கென் பழங்கள்..
வறண்ட நிலப்பகுதியான மொராக்கோவில் ஆடுகளுக்கு மிகவும் பிடித்தமான பசும்புற்கள் கூட கிடைக்காது. இதனால் அந்த ஆடுகளுக்கு அங்கு தெருவோரங்களில் வளரும் ஒரு வகை கீரை மட்டுமே பிரதானமான உணவாக வழங்கப்படுகிறது. அதே சமயத்தில் குறிப்பிட்ட சில சீசன்களில் மொராக்கோவில் உள்ள 'ஆர்கென்' என்ற ஒரு வகை மரங்களில் பழங்கள் பழுத்து தொங்கும். அந்த பழங்கள் ஊறுகாயை போல புளிப்பும், துவர்ப்பும் கலந்த சுவையில் இருக்கும். இதனை மனிதர்கள் விரும்புவதில்லை. ஆனால் தினமும் கீரைகளை மட்டுமே சாப்பிடும் ஆடுகளுக்கு, இந்த பழத்தின் சுவை மிகவும் பிடித்துப் போனது. இதனால் இந்த சீசன் வரும் போதெல்லாம், ஆடுகள் தானாகவே மரத்தின் மீது ஏறி அந்த பழங்களை உண்ணுவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றன.

காரணம் ஆட்டு புழுக்கைகளா..?
முதலில் ஆடுகளின் உரிமையாளர்கள் இதனை தடுத்து வந்தனர். ஆனால், ஆர்கென் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள், ஆடுகளை தடுக்காதீர்கள் என்றும், அதற்காக ஆட்டின் உரிமையாளர்களுக்கு பணமும் கொடுத்து வருகின்றன. ஏனெனில், ஆர்கென் பழத்தில் இருக்கும் விதைகள் மிகவும் கடினமானதாக இருக்கும். இதை அரக்கி எண்ணெய் எடுப்பது மிகவும் சிரமமான காரியம். அதே சமயத்தில், இந்த பழத்தை ஆடுகள் சாப்பிடுவதால் அவற்றின் வயிற்றில் ஓரளவுக்கு செரிமானமாகி புழுக்கைகளோடு சேர்ந்து வரும் பழங்களின் விதைகள் மிருதுவானதாக மாறிவிடும். இதுபோன்ற விதைகளை அரக்கி, எண்ணெய் எடுப்பது அந்த நிறுவனங்களுக்கு எளிதாக இருந்தது. அதனால்தான், ஆடுகள் ஆர்கென் மரத்தின் மீது ஏறுவதை தடுக்க வேண்டாம் என அவர்கள் கூறுகின்றனர். ஆர்கென் எண்ணெய்கள், அழகுசாதப் பொருட்களின் பயன்பாட்டுக்கும், சமையல் எண்ணெய் தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. என்னது.. சமையலுக்குமா.. என்றுதானே கேட்கிறீர்கள்?
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications