For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் கடைசி வெள்ளை ஒட்டகச் சிவிங்கி இதுதான்.. உடலில் ஜிபிஎஸ் பொருத்தியாச்சு.. ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

நைரோபி: உலகில் இப்போது எஞ்சியிருப்பது ஒரே ஒரு வெள்ளை ஒட்டகச் சிவிங்கிதான். அதை உயிரோடு பாதுகாக்க ஒட்டுமொத்த உலகின் உயிரியல் ஆர்வலர்களும் வழிமீது விழி வைத்து பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அதன் உடலில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி, 24 மணி நேரமும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆம்.. வட கிழக்கு கென்யாவில் இருக்கிறது உலகின் கடைசி ஒரே ஒரு வெள்ளை ஒட்டகச்சிவிங்கி.

பொதுவாக ஒட்டகச் சிவிங்கிகள் இந்த வண்ணத்தில் இருக்காது. ஆனால், அரிதான ஒரு மரபணு நிலையால், வெள்ளை நிறத்தில் இந்த ஒட்டகச்சிவிங்கி இருக்கிறது. கடந்த மார்ச் மாதத்தில் இந்த ஒட்டகச் சிவிங்கியின் குடும்பத்தை வேட்டையாடுபவர்கள் கொன்றுவிட்டனர்.

மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. சென்னை அமெரிக்க துணை தூதரகத்தின் கல்வி வாரம்.. பங்கேற்பு இலவசம்மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. சென்னை அமெரிக்க துணை தூதரகத்தின் கல்வி வாரம்.. பங்கேற்பு இலவசம்

ஜிபிஎஸ் பொருத்தப்பட்டது

ஜிபிஎஸ் பொருத்தப்பட்டது

கொல்லப்பட்டதில், ஒரு பெண் ஒட்டகச் சிவிங்கி வெள்ளை நிறத்தில்தான் இருந்தது. அதன் ஏழு மாத குட்டியும் வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டது. இந்த நிலையில்தான், வன ஆர்வலர்கள் இருக்கும் ஒரே வெள்ளை ஒட்டகச் சிவிங்கியையும் காப்பாற்ற ஜிபிஎஸ் பொருத்தும் முடிவுக்கு வந்தனர்.
அந்த வெள்ளை ஒட்டகச்சிவிங்கி எப்போது எங்கு இருக்கிறது என்பதை வனத்துறை அதிகாரிகள் தெரிந்துகொள்ள, இது உதவும்.

கென்யாவில் கண்டுபிடிப்பு

கென்யாவில் கண்டுபிடிப்பு

கென்யாவில் 2016 மார்ச்சில்தான் முதன்முதலில் வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டன. பொதுவாக ஆப்பிரிக்காவில், ஒட்டகச்சிவிங்கிகள், மாமிசம் மற்றும் உடல் பாகங்களுக்காக வேட்டையாடப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

ஆப்பிரிக்க வேட்டை

ஆப்பிரிக்க வேட்டை

ஆப்பிரிக்கா வனவிலங்கு அறக்கட்டளையின் (AWF) கருத்துப்படி, கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 40% விலங்குகள், 15 ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து காணாமல் போயுள்ளன. வேட்டையாடுதல் மற்றும் வனவிலங்கு கடத்தல் ஆகியவை ஆப்பிரிக்க வனவிலங்குகளின் கணிசமான சரிவுக்கு தொடர்ந்து காரணமாக இருந்து வருகிறது.

உலகம் முழுக்க ஒட்டகச் சிவிங்கி

உலகம் முழுக்க ஒட்டகச் சிவிங்கி

இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (ஐ.யூ.சி.என்) ஒட்டகச்சிவிங்கிகளை அதன் சிவப்பு பட்டியலில் வைத்துள்ளன. பாதிக்கப்படக்கூடிய இனமாக பட்டியலிட்டுள்ளது. ​உலகின் மிக உயரமான விலங்கு என்று பெயர் பெற்றது ஒட்டகச் சிவிங்கி. இப்போது உலகம் முழுக்க வெறும் 68,293 ஒட்டகச் சிவிங்கிகள் மட்டுமே உள்ளன.

கண்காணிப்பு தீவிரம்

கண்காணிப்பு தீவிரம்

அறியப்பட்ட ஒரே வெள்ளை நிற ஒட்டகச் சிவிங்கி கென்யாவில் உள்ள இந்த ஒட்டகச் சிவிங்கிதானாம். எனவே எப்படியாவது இதை காப்பாற்றிவிட வேண்டும் என்று வனத்துறையினர் கண்ணில் எண்ணை ஊற்றி பார்த்து வருகிறார்கள்.

English summary
The world’s only known white giraffe has now been fitted with a GPS tracking device in north-east Kenya.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X