Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாகிஸ்தானில் கனமழைக்கு 1,000க்கும் அதிகமானோர் பலி.. பருவம் தவறிய மழைக்கு காலநிலை மாற்றம் காரணமா?

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தாானில் கடந்த ஜூன் மாத்திலிருந்து தொடர்ந்து வரும் கனமழையின் காரணமாக தற்போது வரை 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிந்துள்ளனர்.

இந்நிலையில் "பாகிஸ்தான் தீவிரமான காலநிலை பேரழிவை எதிர்கொள்கிறது" என அந்நாட்டு மத்திய அமைச்சர் செனட்டர் ஷெர்ரி ரெஹ்மான் கூறியுள்ளார்.

இந்த மழை காரணமாக தற்போது வரை அந்நாட்டில் சுமார் 3 கோடிக்கும் அதிகமானோர் கடுமையான பாதிப்புகளை எதிர்க்கொண்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

கனமழை

கனமழை

பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம் குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்ததால் ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்தும், ஏராளமான அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர்.

உயிரிழப்பு

உயிரிழப்பு

அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதியில் இருந்து தற்போது வரை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு உள்ளிட்ட இடர்பாடுகளில் சிக்கி இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் 343 பேர் குழந்தைகளும் அடங்குவர். அதிகபட்சமாக சிந்துவில் மட்டும் 306 பேர் உயிரிழந்துள்ளனர். பலுசிஸ்தானில் 234 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. மீட்பு படையினரும் தொடர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பருவம் மாறிய பருவமழை

பருவம் மாறிய பருவமழை

ஒருசில இடங்களில் வெள்ள மீட்பு பணிகளை ஆய்வு செய்யவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக பாகிஸ்தானில் தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள பெருத்த சேதங்களை கட்டுப்படுத்த இத்தகைய சூழல் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "பாகிஸ்தானில் எப்போதும் 3 முறையே பருவமழை பெய்யும். ஆனால் இந்த முறை 8ஐயும் கடந்து பெய்து வருகிறது" என்று கூறினார்.

பாதிப்புகள்

பாதிப்புகள்

இந்த கனமழையால் தாற்போது வரை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை இழந்து உணவில்லாமல் தவித்து வருகின்றனர். வெள்ளம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் மோசமான வானிலை காரணமாக பலுசிஸ்தான் மாகாணத் தலைநகரான குவெட்டாவுக்குச் செல்லும் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது. தொடர்ந்து மழை பெய்வது வருவதால் நிலைமை மோசமடைய தொடங்கியுள்ளது.

உதவி

உதவி

மேலும், இந்த பாதிப்புகளுக்காக ஐநா மத்திய அவசரக்கால நிதியம் ஏற்கனவே 3 மில்லியன் டாலர்களை ஒதுக்கியிருக்கிறது. நிலைமை இவ்வாறு இருக்க கனமழை ஆகஸ்ட் 30 வரை தொடரும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுவரை 6.8 லட்சம் வீடுகள் மழைக்கு முற்றிலுமாக நாசமாகியுள்ளது. 3,000 கிமீ சாலைகள், சுமார் 150 பாலங்கள் என நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆதரவு

ஆதரவு

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பாகிஸ்தானில் கனமழையின் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொண்டார். மேலும், பாகிஸ்தானில் WHO குழுக்கள் தொற்று நோய்களின் அபாயம் குறித்து ஆய்வு செய்து மதிப்பீடு செய்து வருகிறது என்றும், இந்நாட்டிற்கு தேவையான மருந்து பொருட்கள் என அனைத்து வகையிலும் பாகிஸ்தானை ஆதரிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம்

காலநிலை மாற்றம்

இந்நிலையில் "பாகிஸ்தான் தீவிரமான காலநிலை பேரழிவை எதிர்கொள்கிறது" என அந்நாட்டு மத்திய அமைச்சர் செனட்டர் ஷெர்ரி ரெஹ்மான் கூறியுள்ளார். உலகம் முழுவதும் காலநிலை தொடர்பான பிரச்னைகள் ஐநா சபையில் தொடர்ந்து விவாதமாக்கப்பட்டு அதனை தடுக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. பெரும்பாலும் வளர்ந்த நாடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கரியமில வாயுக்கள்தான் இந்த புவி வெப்பமயமாதலுக்கு காரணமாக அமைகிறது என்றும் இதுவே காலநிலை மாற்றத்திற்கு அடிப்படை என்றும் ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். வளர்ந்த நாடுகள் தங்கள் தேவைகளுக்காக வெளியேற்றும் கரியமில வாயு பாகிஸ்தான் போன்ற வளரும் நாடுகளின் மீது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+