For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாஸ்க்கிற்காக நடக்கும் யுத்தம்.. ஹாங்காங்கில் மீண்டும் களமிறங்கிய இளைஞர்கள்.. தொடங்கிய போராட்டம்!

ஹாங்காங்கில் முகத்தை மறைக்கும் மாஸ்க் தடை செய்யப்பட்டதை அடுத்து அங்கு இளைஞர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

Google Oneindia Tamil News

ஹாங்காங்: ஹாங்காங்கில் முகத்தை மறைக்கும் மாஸ்க் தடை செய்யப்பட்டதை அடுத்து அங்கு இளைஞர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

கடந்த இரண்டு மாதமாக சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக ஹாங் காங் மக்கள் போராடி வருகிறார்கள். சீனாவில் புதிதாக நாடுகடத்தல் சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள். கடந்த ஜூன் மாதம் இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதை ஹாங்காங்கில் கொண்டு வர சீனா முயன்று அந்த மசோதாவை தாக்கல் செய்தது. இதன் மூலம் ஹாங்காங்கில் இருக்கும் யாரை வேண்டுமானாலும் எளிதாக நாடு கடத்த முடியும். இதற்கு எதிராக அங்கு இளைஞர்கள் போராடி வந்தனர்.

போபாலில் மீண்டும் ஒரு போபாலில் மீண்டும் ஒரு "சர்ஜிக்கல் ஸ்டிரைக், புல்வாமா, பாலக்கோடு தாக்குதல்".. மக்கள் வியப்பு

இல்லை

இல்லை

ஹாங்காங்கில் இந்த போராட்டம் தற்போது கொஞ்சம் தணிந்து இருக்கிறது. 5 கோரிக்கைகளில் முக்கியமான கோரிக்கையான நாடு கடத்தல் சட்டத்தை வாபஸ் பெறுவதாக ஹாங்காங் அரசு அறிவித்துவிட்டது. அதேபோல் சில போராட்டக்காரர்கள் மட்டும் தற்போது வரை விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

 தணிந்து வந்தது

தணிந்து வந்தது

இதனால் போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாக தணிந்து வந்தது. இந்த நிலையில் ஹாங்காங்கில் மேலும் போராட்டம் நடக்க கூடாது என்பதால் அங்கு முகத்தை மறைக்கும் மாஸ்குகள் தடை செய்யப்பட்டது. இதை அணிந்துதான் அங்கு இளைஞர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

என்ன சட்டம்

என்ன சட்டம்

இதைத்தான் தற்போது ஹாங்காங்கில் ஆட்சியாளர் கேரி லேம் தடை செய்துள்ளார். போராட்டக்காரர்களை கைது செய்ய வசதியாக இந்த தடையை அவர் வெளியிட்டுள்ளார். இதற்காக அவர் அவசர கால சட்டத்தை பயன்படுத்தி தடையை நிறைவேற்றி உள்ளார்.

ஏன் தடை

ஏன் தடை

கடந்த 50 வருடங்களாக யாருமே இந்த சட்டத்தை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தற்போது ஹாங்காங்கில் மேலும் போராட்டத்தை உருவாக்கி உள்ளது. மீண்டும் அங்கு இளைஞர்கள் களமிறங்கி போராடி வருகிறார்கள். நேற்று மாலையில் இருந்து போராட்டம் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.

மாஸ்க்

மாஸ்க்

மீண்டும் இளைஞர்கள் தற்போது மாஸ்க் அணிந்தபடி சாலையில் இறங்கி போராடி வருகிறார்கள். இவர்களை அந்நாட்டு பாதுகாப்பு படை கைது செய்துள்ளது. இதனால் பல இடங்களில் மோசமாக கலவரம் நடந்து வருகிறது. ஹாங்காங்கில் மீண்டும் இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஏன் தொடக்கம்

ஏன் தொடக்கம்

இந்த மாஸ்க் தடை என்பது சாதாரண தடை கிடையாது. இளைஞர்களை கைது செய்ய வேண்டும் என்று அரசு இப்படி செய்கிறது. இது தொடக்கம்தான். இப்படியே விட்டால் நிறைய விஷயங்களை தடை செய்வார்கள். அதனால்தான் நாங்கள் தற்போது தீவிரமாக போராட்டம் செய்து வருகிறோம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Hong Kong youths start the protest again in streets over Face Mask Ban.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X