1400 படகுகளை.. மொத்தமாக அனுப்பி! கடலில் 200 மைலுக்கு செயற்கை சுவர் எழுப்பிய சீனா! மிரண்ட உலக நாடுகள்
பெய்ஜிங்: தென் சீனக்கடலில் 1400 கப்பல்களை ஒரே நேரத்தில் சீனா களமிறங்கிய சம்பவம் உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.
ஜனவரி கடைசி வாரம் அது.. தென் சீனக்கடலில் ரேடார் திரைகளில் சிறிய புள்ளிகளாகத் தெரிந்த உருவங்கள், மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கின. முதலில் பத்து, பிறகு ஐம்பது... அடுத்த சில மணி நேரங்களில் அந்த எண்ணிக்கை 1,400-ஐத் தொட்டது.. மீன்பிடிப் படகுகள் போலத் தெரிந்தாலும், அவை கடலின் குறுக்கே 200 மைல் நீளத்திற்கு ஒரு பிரம்மாண்ட இரும்பு வேலியைப் போல அணிவகுத்து நின்றன. சீனா களமிறங்கிய மீன் பிடி படகுகள் அவை!

செயற்கைக்கோள் படங்களில் இது ஒரு 'தங்க நெக்லஸ்' போலக் காட்சியளித்தாலும், அதன் பின்னால் இருக்கும் அரசியல் ஆட்டம் உலக நாடுகளை திணற வைத்துள்ளது.
மீன்பிடிப் படகுகளா? நிழல் ராணுவமா?
மேலோட்டமாகப் பார்த்தால், அந்தப் படகுகளில் மீனவர்கள் ஆரஞ்சு நிற லைஃப் ஜாக்கெட் அணிந்து கொண்டு, நூடுல்ஸ் வேகவைப்பதும், வலைகளைச் சரிபார்ப்பதுமாக இயல்பாகவே இருந்தனர். ஆனால், சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் இதைப் பார்த்து கண்களைத் தேய்த்துக் கொண்டு 'ஜூம்' செய்தனர். இது மீன்பிடித் தொழிலா அல்லது சத்தமில்லாமல் நடத்தப்படும் ஒரு ராணுவ வியூகமா? என்று குழம்பிப்போனார்கள்.
வழக்கமான மீன்பிடிப் படகுகளை விட இவை அதிக சக்தி வாய்ந்தவை. சர்ச்சைக்குரிய கடல் பகுதிகளில் சீனா தனது அதிகாரத்தைச் செலுத்த, இப்படி 'சிவிலியன்' படகுகளை ஒரு கேடயமாகப் பயன்படுத்துவது வழக்கம். அதைதான் தென் சீனக்கடலில் சீனா இப்போது செய்துள்ளது. இதற்கு ஆய்வாளர்கள் வைத்துள்ள பெயர்: 'மேரிடைம் மிலிஷியா' (Maritime Militia).
ஊசி நுழையக்கூட இடமில்லாத அளவுக்குப் படகுகள் நெருக்கமாக நின்று அங்கே சுவர் போல மாறி உள்ளன. அதாவது மற்ற நாட்டு படகுகள், முக்கியமாக ஆஸ்திரேலியா, அமெரிக்கா படகுகள் உள்ளே நுழைய முடியாத அளவிற்கு இந்த படகுகள் சுவர் போல மாறி உள்ளது.
ஆயுதம் இல்லாத போர்!
சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு ஒரு முக்கியமான செய்தியை உலக நாடுகளுக்கு சொல்கிறது: ஏவுகணைகள் தேவையில்லை, வெறும் படகுகளைக் கொண்டே ஒரு கடற்பரப்பை முடக்க முடியும்.
1,400 படகுகள் 200 மைல் தூரத்திற்குப் பரவி நிற்கும்போது, மற்ற நாட்டு ஆய்வுக் கப்பல்களோ அல்லது மீனவர்களோ அந்தப் பகுதிக்குள் நுழையவே அஞ்சுகிறார்கள். மீனவர்களை தாக்கவும் முடியாது. அது மோதலுக்கு வழி வகுக்கும்.
ஒரே நாளில் போர் தொடுப்பதற்குப் பதிலாக, மெல்ல மெல்ல அந்தப் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது சீனாவின் பாணி.
சர்வதேசச் சட்டங்கள் இந்தப் பகுதி சீனாவுக்குச் சொந்தமில்லை என்று சொன்னாலும், "கடலில் யார் நிற்கிறார்களோ, அவர்களுக்கே அந்த இடம் சொந்தம்" என்ற யதார்த்தத்தை சீனா இங்கே நிலைநாட்டுகிறது.
நமக்கான எச்சரிக்கை என்ன?
இது ஏதோ தூரத்துக் கடலில் நடக்கும் பிரச்சனை என்று நாம் கடந்து போய்விட முடியாது. தென் சீனக்கடலில் நடக்கும் மோதலால் அமெரிக்கா - சீனா இடையிலான சண்டை உச்சம் எடுக்கும். இதனால் ஆசிய அரசியலில் அமெரிக்காவின் தலையீடும் அதிகரிக்கும். ஒரு நாட்டின் எல்லையைத் தகர்க்க டாங்கிகள் தேவையில்லை; ஆயிரக்கணக்கான சாதாரண மனிதர்களையோ அல்லது கருவிகளையோ கொண்டு ஒரு இடத்தை ஆக்கிரமிக்க முடியும். மீனவர்களை வைத்தே ஒரு கடலை ஆக்கிரமிக்க முடியும் என்று சீனா நிரூபித்துள்ளது.
தென் சீனக் கடல் உலக நாடுகளின் வர்த்தக மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு ஒரு மிக முக்கியமான உயிர்நாடியாகத் திகழ்கிறது. இந்தியப் பெருங்கடலுக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் இடையே அமைந்துள்ள இந்த கடல் வழித்தடம் வழியாகவே உலகின் மொத்த கடல்வழி வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கு (சுமார் 3.4 டிரில்லியன் முதல் 5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள்) நடைபெறுகிறது. ஜப்பான், தென் கொரியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் பெட்ரோலியப் பொருட்களில் சுமார் 40% இந்தப் பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. இது வெறும் போக்குவரத்துப் பாதை மட்டுமல்லாமல், கடலுக்கடியில் சுமார் 11 பில்லியன் பேரல் எண்ணெய் மற்றும் 190 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயு போன்ற பிரம்மாண்டமான இயற்கை வளங்களைக் கொண்ட ஒரு பொக்கிஷமாகவும் கருதப்படுகிறது.
மேலும், உலகின் மொத்த மீன்பிடி உற்பத்தியில் 10% இந்தப் பகுதியிலிருந்தே கிடைப்பதால், இது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உணவுப் பாதுகாப்பிற்கு மிக அவசியம். இதனால், இந்தப் பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது பொருளாதார ரீதியாக உலகை ஆதிக்கம் செலுத்துவதற்கும், ராணுவ பலத்தைக் காட்டுவதற்குமான ஒரு போராக மாறியுள்ளது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications