For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாழ்வாக வந்த ஹவுதி டிரோன்.. அபுதாபி ஏர்போர்ட்டில் நுழைந்தது எப்படி? அட்டாக் எப்படி நடந்தது? பின்னணி

Google Oneindia Tamil News

அபுதாபி: அபுதாபி விமான நிலையத்திலும், எண்ணெய் சேமிக்கு கிடங்கிலும் ஹவுதி படைகள் நடத்திய டிரோன் தாக்குதல் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகி உள்ளன.

ஏமனில் இருக்கும் ஹவுதி படைகளுக்கும், சவுதி அரசுக்கும் இடையே பல வருடங்களாக மோதல் நிலவி வருகிறது. ஏமனில் இருந்து சவுதியின் ராணுவம் வெளியேறிவிட்டாலும் ஏமன் ராணுவத்தை வைத்து அந்நாட்டை சவுதிதான் கட்டுப்படுத்தி வருகிறது. ஏமனின் பெரும்பான்மையான பகுதிகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததில் இருந்தே சவுதிக்கும், ஹவுதி போராளி குழுவிற்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டு இருக்கிறது.

ஏமனில் இருக்கும் ஹவுதி என்ற போராளி குழுவின் முக்கிய எதிரி சவுதிதான். இதனால் சவுதி மீது ஹவுதி குழு பலமுறை ஏவுகணைகளை ஏவி இருக்கிறது. அதிகமாக எல்லைப்பகுதியில் ஏவுகணைகளை ஏவி உள்ளது.

அபுதாபி ஏர்போர்டில் டிரோன் தாக்குதல்.. 2 இந்தியர்கள் உட்பட மூவர் பலி.. ஹவுத்தி இயக்கம் பொறுப்பேற்பு.

சவுதி அபுதாபி

சவுதி அபுதாபி

சவுதியோடு ஐக்கிய அரபு அமீரகமும் இந்த விவகாரத்தில் உடன் இருக்கிறது. இரண்டு நாடுகளும் ஹவுதி படைகளை எதிர்த்து வருகிறார்கள். ஹவுதி படைகளுக்கு இன்னொரு பக்கம் ஈரான் உதவி செய்து வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன் இந்த குழு சவுதியை தாக்க முயற்சி எடுத்து இருந்தது. சவுதி தலைநகர் ரியாத்தில் இருக்கும் கிங் காலித் விமான நிலையத்தை தாக்க முயன்று இருக்கிறது. ஆனால் ஹவுதி குழு அனுப்பிய ஏவுகணையை பாதி வழியிலேயே மறித்து சவுதி செயலிழக்க வைத்தது.

ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகம்

இந்த நிலையில்தான் தற்போது சவுதியோடு கூட்டாக இருக்கும் ஐக்கிய அரபு அமீரகம் மீதும் ஹவுதி படைகள் தாக்குதல் நடத்தி உள்ளது. சவுதியோடு நட்பாக உள்ளதால் அபுதாபியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹவுதி படைகள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. முதலில் அபுதாபியில் இருக்கும் ADNOC என்ற எண்ணெய் நிறுவன சேமிப்பு கிடங்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.

 ஐக்கிய அரபு அமீரகம் ஹவுதி

ஐக்கிய அரபு அமீரகம் ஹவுதி

இந்த தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது என்று அபுதாபி போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர். அதன்படி அந்த சிறிய அளவிலான டிரோன் விமானங்கள் தாழ்வாக பறந்து வந்து இருக்கின்றன. இதில் இருந்த சிறிய ரக குண்டுகள் எண்ணெய் சேமிப்பு கிடங்கில் போடப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்னொரு பக்கம் விமான நிலையத்தில் இன்னொரு குண்டு டிரோன் மூலம் போடப்பட்டுள்ளது.

அபுதாபி

அபுதாபி

மிகவும் தாழ்வாக பறந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த டிரோன்களை கண்டுபிடிக்க முடியவில்லை. ரேடாரில் இது வந்தது தெரியவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர். மொத்தம் 2 இந்தியர்கள் உட்பட மூன்று பேர் இந்த தாக்குதலில் பலியாகி உள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்ட எண்ணெய் கிணறு அமீரக அரசு மூலம் நடத்தப்படும் எண்ணெய் கிணறு ஆகும். இந்த நிலையில் சவுதி, அமீரகம் இணைந்து பதிலடி தாக்குதலில் இறங்கி உள்ளன.

 டிரோன்

டிரோன்

அந்த ட்ரோன்கள் திடீரென தாழ்வாக வந்து தாக்கி உள்ளன. நீண்ட தூரத்தில் இருந்து இதை இயக்கி இருக்க முடியாது. அருகில் எங்கோ இருந்துதான் இதை ஹவுதி இயக்கி உள்ளது. நாங்கள் ஒரு 'டீப் ஆபரேஷன்' ஒன்றை நடத்தி வருகிறோம். சில மணி நேரங்களில் இது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவோம் என்று இரண்டு நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

English summary
How Houthi drone enters Abu Dhabi airport? What happened for real?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X