நான் பிரதமராக இருந்தால் பணமதிப்பிழப்பு ஃபைலை குப்பையில் வீசியிருப்பேன்: ராகுல் பொளேர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  முருகன் சாந்தன் பேரறிவாளனை மன்னித்த ராகுல்

  சிங்கப்பூர்: நான் பிரதமராக இருந்திருந்தால் பணமதிப்பிழப்பு கோப்பை குப்பை தொட்டியில் தூக்கி எறிந்திருப்பேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

  சிங்கப்பூர் உள்ளிட்ட தென் கிழக்காசிய நாடுகளுக்கு ராகுல் காந்தி 5 நாட்கள் பயணமாக சென்றுள்ளார். அவரிடம் முன்னாள் ஐஐஎம் மாணவர்கள் கலந்துரையாடல் நடத்தினர்.

  If I were PM, Rahul says what he would have done

  அப்போது அவரிடம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ராகுல் எப்படி வித்தியாசமாக தவிர்த்திருப்பார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

  அதற்கு ராகுல் கூறுகையில், நான் பிரதமராக இருந்திருந்தால் , யாரோ சிலர் பணமதிப்பிழப்பு என்று எழுதிய கோப்பை என்னிடம் கொடுத்திருந்தால், அதை நான் குப்பைத் தொட்டியிலோ கதவுக்கு வெளியேயோ, குப்பை மேட்டிலோ வீசியிருப்பேன்.

  இப்படிதான் அதை நான் தவிர்த்திருப்பேன். இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை நன்மை அளிக்காது. நான் ஆண்களை விட பெண்களை சிறந்தவர்களாகவே கருதுவேன். மேற்கத்திய சமூகம் உள்பட எல்லா சமூகத்திலும் ஒரு தலைப்பட்சம் உள்ளது.

  அதை சரி செய்துவிட்டாலே சம உரிமை கூட தேவையில்லை என்றார் ராகுல் காந்தி. கடந்த 2016-ஆம் ஆண்டு இரவு நவம்பர் 8-ஆம் தேதி ரூ. 1000, ரூ.500 நோட்டுகளை மத்திய அரசு செல்லாது என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Congress president Rahul Gandhi said that demonetisation was "not a good" initiative and if he were the Prime Minister he would have thrown the proposal in the "dustbin".

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற