For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

“பாகிஸ்தானுக்காக இந்தியா” – டுவிட்டரையே நெகிழ வைத்து மனதால் ஒன்றிய இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும்

Google Oneindia Tamil News

பாகிஸ்தான்: பாகிஸ்தான் பெஷாவர் நகரில் சின்னஞ்சிறு குழந்தைகள் மீது நடைபெற்ற கொலைவெறித் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானியர்களுக்கு, டுவிட்டர் மூலமாக உங்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம் என்று நெகிழ்ச்சி தருணத்தைக் காட்டியுள்ளனர் இந்தியர்கள்.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவத்துக்குச் சொந்தமான பள்ளிக்கூடத்தை தாலிபான்கள் நேற்று நடத்திய தாக்குதலில் 132 குழந்தைகள் உட்பட 141 பேர் உயிரிழந்தனர்.

தாக்குதல் தொடங்கியது முதலே டுவிட்டரில் #PeshawarAttack என்ற ஹேஷ்டேக் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முன்னிலை வகித்தது.

'India with Pakistan': school massacre solidarity

ஆதரவுக் கரம்:

இந்தக் கொடூரத் தாக்குதலின் தன்மை தொடர்பாக செய்திகள் வெளிவரத் தொடங்கியதும் டுவிட்டரில் பாகிஸ்தான் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்தியர்கள் இட்ட பதிவுகளின் எண்ணிக்கை மிகுதியாகத் தொடங்கியது.

உங்களுடன் நாங்கள் இருக்கின்றோம்:

இதையடுத்து, இந்திய அளவிலான டுவிட்டர் ட்ரெண்டிங்கில் "பாகிஸ்தானுடன் இந்தியா" எனப் பொருள்தரும் #IndiawithPakistan என்ற ஹேஷ்டேக் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.

சகோதரத்துவம் பாராட்டிய இருதரப்பினர்:

இந்தியர்கள் தங்களது ஆறுதல் வார்த்தைகளை சகோதரத்துவத்துடன் பகிர்ந்தவண்ணம் இருந்தனர். இது, உலக அளவில் ஊடகங்களால் செய்திகளாகப் பதிவாகின.

இனம் கடந்து தழைத்த மனிதம்:

அதேபோல், இதே ஹேஷ்டேக்கை மேற்கோள்காட்டி பாகிஸ்தான் மக்கள் ட்விட்டரில், இந்தியர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். இந்தியர்களின் ஆறுதல் வார்த்தைகளானது நாடு, மொழி, இனம் கடந்து மனிதம் தழைப்பதை உணர்த்துவதாக, அவர்களில் பலர் பதிவிட்டனர்.

பதிலுக்கு நெகிழ வைத்த பாகிஸ்தானியர்:

குறிப்பாக, இந்தியர்களின் சோகம் மிகுந்த பதிவுகளுக்கு "சகோதர, சகோதரிகளே உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று பாகிஸ்தானியர்கள் பதில் பதிவுகள் செய்துள்ளனர்.

தோளோடு தோள் தருவோம்:

எல்லா இடையூறுகளையும் கடந்து தோளோடு தோள் தாங்கி நிற்கும் இந்த மனிதத் தன்மைதான் இன்னும் நம்மை சிறிதேனும் வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது. எந்த பிரச்சனைகளுக்கு இரு தரப்பு மக்களும் காரணமில்லை.

மனதால் நாங்கள் ஒன்றுதான்:

சுயநலம் பிடித்த சில தீவிரவாதிகள்தான் காரணம்.. மனதால் இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் ஒன்றுபட்டுதான் உள்ளனர் என்பதைத்தான் பிரதிபலித்துள்ளன இந்த மனதை உருக்கும் டுவிட்டர் பதிவுகள்.

English summary
Thousands of Indians are sending a message of support to Pakistan on Twitter in the wake of the Taliban school massacre in Peshawar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X