For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2-வது உலகப் போரின் 75-வது ஆண்டு வெற்றி விழா- மாஸ்கோ அணிவகுப்பில் இந்திய ராணுவம் பங்கேற்பு

Google Oneindia Tamil News

மாஸ்கோ: 2-வது உலகப் போரின் 75-வது ஆண்டு வெற்றி விழாவை முன்னிட்டு ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்ற வெற்றி விழா அணிவகுப்பில் இந்திய ராணுவ வீரர்களும் பங்கேற்றனர்.

1941-1945 ஆம் ஆண்டுகளில் சோவியத் யூனியன் 2-வது உலகப் போரில் வென்றது. இந்த வெற்றியின் 75-வது ஆண்டு விழாவை ரஷ்யா கொண்டாடுகிறது.

Indian armed forces participate in Moscow Victory day Parade

மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் இன்று நடைபெற்ற, வெற்றி தின அணிவகுப்பில் இந்திய இராணுவப் படையினர் பங்கேற்றனர். அனைத்து அணிகளையும் சேர்ந்த 75 பேர் கொண்ட இந்திய இராணுவப் படையின் முப்படை சேவை பிரிவு, ரஷ்ய இராணுவபடை மற்றும் 17 பிற நாடுகளின் படையினருடன் அணிவகுப்பில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்றார்.

ராஜ்நாத் சிங் உடன் மீட்டிங்?.. சீன ஊடகம் வெளியிட்ட செய்தி.. இந்தியா அதிரடி மறுப்பு.. என்ன நடந்தது?ராஜ்நாத் சிங் உடன் மீட்டிங்?.. சீன ஊடகம் வெளியிட்ட செய்தி.. இந்தியா அதிரடி மறுப்பு.. என்ன நடந்தது?

2-வது உலகப் போர் பின்னணி

இரண்டாம் உலகப் போரின்போது, மிகப்பெரிய அளவிலான நேசநாடுகளின் படைகளில் ஒன்றாக பிரிட்டிஷ் இந்திய இராணுவப் படைகள் இருந்தன. இவை வல்லரசு சக்திகளுக்கு எதிராக வடக்கு - கிழக்கு ஆப்பிரிக்க இயக்கம், மேற்கு பாலைவன இயக்கம், ஐரோப்பிய தியேட்டர் ஆகியவற்றில் பங்கேற்றன.

இதில் 87 ஆயிரம் இந்தியப் படையினர் உயிர்த் தியாகம் செய்தனர். 34, 354 பேர் காயமடைந்தனர். இந்திய இராணுவம் எல்லா முன்னணி நிலையிலும் போரிட்டது. அது மட்டுமல்லாமல் தெற்கு, ஈரானிய வழிப்பாதை, லெண்ட் லீஸ் பாதை ஆகியவை மூலமாக ஆயுதங்கள், போர்க்கருவிகள், உதிரி பாகங்கள், உணவு ஆகியவற்றை சோவியத் யூனியன், ஈரான், ஈராக் ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்படுவதையும் உறுதி செய்தது.

18 விக்டோரியா ஜார்ஜ் கிராஸ் உட்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாராட்டு விருதுகள் இந்திய இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் இந்திய இராணுவப் படையினரின் வீரத்தைப் பாராட்டி, சோவியத் யூனியன் 1944 அன்று ராயல் இந்திய இராணுவ படைப் பிரிவைச் சேர்ந்த சுபேதார் நாராயணராவ் நிக்கம், ஹவில்தார் கஜேந்திர சிங் சந்த் ஆகியோருக்கு சோவியத் யூனியனின் உயரிய ஆட்சிக் குழுவின் மிகைல் காலினின், அலெக்சாண்டர் கார்கின் ஆகியோர் கையெழுத்திட்ட மிக உயரிய விருதான சிவப்பு நட்சத்திர விருதுக்கான ஆணை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Russia is celebrating the 75th anniversary of victory of the then Soviet People in the great Patriotic War of 1941-1945.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X