மிகக் குறைந்த விலையில் விமான ஓடு பாதை அமைக்கத் திட்டம் கொடுத்து பிரிட்டனை கலக்கி வரும் இந்தியர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் மூன்றாவது ஓடுபாதை அமைக்க மிகக் குறைந்த திட்ட மதிப்பீட்டை கொடுத்து அசத்தியுள்ளார் இந்தியர்.

பிரிட்டனில் மிக முக்கியமானது ஹீத்ரூ விமான நிலையம். இங்கு உலக நாடுகளில் உள்ள அவ்வளவு விமானங்களும் இங்கு வந்து செல்லும்.

ஆயிரக்கணக்கான மக்கள் இங்கிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு அன்றாடம் பயணம் செய்து வருகின்றனர். இங்கு 3வது விமான ஓடுபாதை அமைக்கத் திட்டம் தீட்டப்பட்டது.

மூக்கில் விரல் வைத்த பிரிட்டன் அதிகாரிகள்

மூக்கில் விரல் வைத்த பிரிட்டன் அதிகாரிகள்

இந்தத் திட்டத்திற்கு திட்ட மதிப்பீட்டை பல்வேறு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொடுத்தன. ஆனால், இந்தியரான சுரிந்தர் அரோரா கொடுத்த திட்ட மதிப்பீட்டால் எல்லோரும் மூக்கில் விரலை வைத்துவிட்டனர்.

அசத்திய அரோரா

அசத்திய அரோரா

அந்த அளவிற்கு சீப்பாக திட்ட மதிப்பை கொடுத்துள்ளார் சுரிந்தர், அரோரா குழுமத்தின் நிறுவனரான இவர் கொடுத்த மதிப்பு, தற்போதுள்ள திட்டத்தைவிட 6.7 பில்லியன் பிரிட்டன் பவுண்டுகள் குறைவாம். அதனால் அசந்தே போய்விட்டார்களாம் பிரிட்டன் அதிகாரிகள்.

இந்தியாவில் பிறந்த சுரிந்தர்

இந்தியாவில் பிறந்த சுரிந்தர்

பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர் சுரிந்தர். சிறு வயதிலேயே லண்டன் சென்றுவிட்ட அவர், 1977இல் பிரிட்டன் ஏர்வேசில் ஜூனியர் கிளார்க்காக பணியில் சேர்ந்தார். பின்னர், 1982ல் தொழில் ஒன்றை தொடங்கி அரோரா குழுமத்தை உருவாக்கினார்.

குறுகிய கால வளர்ச்சி

குறுகிய கால வளர்ச்சி

தனது திறமையின் மூலம் குறுகிய காலத்திலேயே நல்ல பெயரை பிரிட்டனில் சம்பாதித்துவிட்டார் அரோரா. இதன் மூலம் பிரிட்டனில் உள்ள மிகப் பெரிய செல்வந்தர்களின் பட்டியலில் இவர் பெயரும் இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து கண்ணும் கருத்துமாக தொழில் செய்த அரோரா, குறைந்த மதிப்பீட்டில் ஹீத்ரு ஓடுபாதை திட்டத்தை அளித்து அசத்தியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Indian origin Arora Surender has submitted plans for a 3rd runway at Heathrow.
Please Wait while comments are loading...