உக்ரைன்: கார்கிவ் நகரில் ரஷ்யா குண்டுவீச்சில் இந்திய மாணவர் பலி- கர்நாடகாவை சேர்ந்தவர்!
உக்ரைன்: கார்கிவ் நகரில் ரஷ்யா குண்டுவீச்சில் இந்திய மாணவர் பலி- கர்நாடகாவை சேர்ந்தவர்!
கார்கிவ்: உக்ரைன் நாட்டின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரஷ்யா ராணுவம் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் இந்திய மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழந்துள்ளார். கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நவீன் சேகரப்பா என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது கடந்த 6 நாட்களாக ரஷ்யா யுத்தம் நடத்தி வருகிறது. இந்த யுத்தத்தில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

எல்லைகளை நோக்கி
உக்ரைனில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடருகின்றன. உக்ரைனுக்கான இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து கிடைத்த ரயில்களில் ஏறி எல்லைகளுக்கு இந்திய மாணவர்கள் தப்பி செல்கின்றனர்.

இந்திய மாணவர் பலி- கர்நாடகாவை சேர்ந்தவர்
உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரயில் நிலையம் செல்ல முயன்ற இந்திய மாணவர் நவீன் சேகரப்பா, ரஷ்யா ராணுவத்தின் குண்டு வீச்சு தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இதனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதலில் உயிரிழந்த நவீன் சேகரப்பா, கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆபரேஷன் கங்கா
முன்னதாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், உக்ரைனில் சீனாவைச் சேர்ந்த 6,000 பேர் சிக்கியுள்ள நிலையில், அந்நாட்டின் குடிமக்களை வெளியேற்றும் திட்டங்களை ஒத்திவைத்துள்ளது. அதேசமயம் இந்தியா ஆபரேஷன் கங்கா திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு விமானங்களை அனுப்பி, இந்தியர்களை மீட்டு வருகிறது. உக்ரைனில் உள்ள சீனக் குடிமக்களுக்கு அந்நாடு பயண அறிவுரைகளை வெளியிடாமல் ஆதரவு நடைமுறைகளை மேற்கொள்ளாத நிலையில் இந்தியா தொடர்பு எண்கள், பயண அறிவுரைகள், ஆதரவு நடைமுறைகளை இந்திய குடிமக்களுக்கு வெளியிட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த 900 ஊழியர்கள் உக்ரைனில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை அமெரிக்காவால் வெளியேற்ற இயலவில்லை. ஆனால் இந்தியாவும், அமெரிக்காவும் ஒரே மாதிரியான பயண அறிவுரைகளை வெளியிட்டுள்ளன. உதவிக்கான தொலைபேசி எண்களையும் வெளியிட்டுள்ளன. ஜெர்மனியும் தனது குடிமக்களை வெளியேற்றி கொண்டுவரும் நிலையில் இல்லை. உக்ரைனுக்கான பிரிட்டன், ஜெர்மனி தூதரகங்கள் கீவ் நகரிலிருந்து மாற்றப்பட்டுள்ள நிலையில் இந்தியத் தூதரகம் அங்கேயே செயல்படுகிறது.

80,000 வெளிநாட்டு மாணவர்கள்
உக்ரைனின் கல்வி மற்றும் அறிவியல் அமைச்சகத் தரவுகள் படி 80,000 சர்வதேச மாணவர்கள் அங்கு பயின்று வருகின்றனர். இவர்களில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனிலிருந்து தனது குடிமக்களை வெளியேற்றிக் கொண்டுவருவதற்கான ஆபரேஷன் கங்கா திட்டத்தை மிகத்தீவிரமாக செயல்படுத்தி வருகிறது என தெரிவித்திருந்தது.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications