37வது அலை தாக்குதலை தொடங்கிய ஈரான்.. இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. சிக்கலில் இஸ்ரேல்!
தெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. இன்று அதிகாலை 37வது அலைவரிசை தாக்குதலை ஈரான் தொடங்கியிருக்கிறது. இந்த தாக்குதலில் 1 டன் அளவுக்கு வெடி பொருட்களை கொண்டுள்ள ஏவுகணையை ஈரான் ஏவியுள்ளதால், இஸ்ரேல் அச்சமடைந்திருக்கிறது.
இஸ்ரேல் நோக்கியும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகள் நோக்கியும் ஈரான் தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீசி வருகிறது. ஒவ்வொரு அலையிலும் ஏராளமான ஏவுகணைகள் வீசப்பட்டிருக்கின்றன. இன்று அதிகாலை 37வது அலைவரிசை தாக்குதல் ஈரான் தொடங்கியிருப்பதை 'மேஹ்ர்' உள்ளிட்ட சர்வதேச செய்தி ஊடகங்கள் உறுதி செய்திருக்கின்றன.
எத்தனை ஏவுகணைகள்?
நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் இந்த தாக்குதலின்போது ஏவப்பட்டிருக்கின்றன. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகளிடம் இருக்கும் வான் பாதுகாப்பு அம்சங்கள் இதை சமாளித்துவிடும். இருப்பினும், தப்பி தவறி 1 ஏவுகணை உள்ளே விழுந்தால் கூட கடுமையான பாதிப்பு ஏற்படும். காரணம், ஈரான் இந்த முறை அனுப்பிய ஏவுகணகள் சுமார் 1 டன் அளவுக்கு வெடிபொருட்களை சுமந்து வந்தன. 'கெய்பர்', 'காதிர்' மற்றும் 'கோரம்ஷார்' உள்ளிட்ட ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
மோசமான ஏவுகணைகள்
இதில் மிக மோசமான ஆயுதம் எனில் அது 'கோரம்ஷார்' தான். இது திரவ எரிபொருளால் இயங்கும், நடுத்தர தூர ஏவுகணையாகும். 2000 கி.மீ தூரத்தில் உள்ள இலக்கை கூட இது துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. ஏன் இது மோசமானது என அழைக்கப்படுகிறது எனில், இதன் 'வார்ஹெட்', அதாவது வெடிபொருளை கொண்டுள்ள பகுதியில் சுமார் 1500-1800 கி.கி வரை வெடிபொருளை வைக்க முடியும் என்பதுதான். மட்டுமல்லாது இது எதிரி நாடுகளின் ரேடார்களை ஏமாற்றி செல்லும் திறன் கொண்டது.

ஒலியை விட 16 மடங்கு வேகம்
'கெய்பர்' ஏவுகணைகள் ஒலியை விட 16 மடங்கு வேகத்தில் பாயும் என்பதால், இஸ்ரேலுக்கு இதை பார்த்து எப்போதும் பயம் இருக்கிறது. குறுகிய காலத்தில் ஏவ முடியும். சுமார் 15000 கி.கி எடை கொண்ட வெடி பொருட்களை இதனால் சுமந்து செல்ல முடியும். இதன் சிறப்பம்சம் என்னவெனில், இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அம்சமான 'அயன்டோம்'-ஐ துளைத்துக்கொண்டு செல்லும் என்பதுதான். எனவே, இஸ்ரேலுக்கு இதுவும் தலைவலியை கொடுத்து வருகிறது.
சிக்கலில் இஸ்ரேல்
அதேபோல காதிர் ஏவுகணையும் ரொம்பவும் மோசமானது. இதன் வார்ஹெட் 2000 கி.கி வரை வெடிபொருளை சுமந்து செல்லும். அதேபோல, திரவ எரிபொருளில் இது இயங்குகிறது என்றாலும், மிக குறைவான நேரத்தில் இதை ஏவ முடியும்.
இப்படியான ஏவுகணைகள் மூலம், இஸ்ரேலின் டெல் அவிவ், ஈராக்கின் குர்திஸ்தான் பகுதயில் உள்ள அமெரிக்காவின் அல்-ஹரீர் விமானப்படைத்தளம், கத்தாரில் உள்ள அமெரிக்காவின் அல்-உடெய்ட் தளம் மற்றும் அமெரிக்காவின் 5வது கடற்படைத்தளம் உள்ளிட்டவற்றை ஈரான் தாக்கி வருகிறது.
-
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
அமெரிக்கா வான் தாக்குதலில் இந்தியா வர இருந்த ஈரான் விமானம் சேதம்! என்ன நடந்தது? -
"அடுத்து கியூபா தான்.." ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் அமெரிக்கா.. வெளிப்படையாக டிரம்ப் எச்சரிக்கை -
நீங்க ஒன்னும் மன்னர் கிடையாது.. அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
பாகிஸ்தான் இருக்க வேண்டிய இடம் இதுதான்.. முகத்தில் அறைந்த அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை -
ஈரான் போர் காரணமாக எந்தெந்த நாட்டில் என்ன இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது தெரியுமா? லிஸ்ட் இதோ -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
இனி ரேஷன் கடை மட்டுமில்லை! பெட்ரோல் பங்க்குகளிலும் மண்ணெண்ணெய் விற்பனை! மத்திய அரசு அனுமதி -
இஸ்ரேல் முழுதும் வெடித்த போராட்டம்.. ஈரான் போரை கைவிட மக்கள் கொந்தளிப்பு! நெதன்யாகுவிற்கு சிக்கல் -
இஸ்ரேலுக்கு நாலா பக்கமும் விழும் அடி.. ஹைபா கடற்படை தளம் மீது ஏவுகணை வீசி ஹிஸ்புல்லா தாக்குதல்












Click it and Unblock the Notifications