அமெரிக்க ராணுவ நிலைகள் மீதான தாக்குதல் தொடரும்.. ஈரானின் புதிய தலைவர் அறிவிப்பு!
தெஹ்ரான்: ஈரானின் தலைவராக இருந்த காமெனி சமீபத்தில் கொல்லப்பட்டார். இதனையடுத்து அவரது மகன் 'மொஜ்தபா காமெனி', புதிய தலைவராக பொறுப்பேற்றிருந்த நிலையில், தற்போது முதல் முறையாக நாட்டு மக்களிடையே உரையாற்றியுள்ளார். தனது உரையில், அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் தொடரும் என்று கூறியிருக்கிறார்.
ஈரானின் பக்கத்து நாடுகளில் அமெரிக்காவின் ராணுவ நிலைகள் இருக்கின்றன. இதனை குறி வைத்தும், அமெரிக்க ராணுவத்திற்கு உதவும் பொருளாதார நிலைகள் மீதும் ஈரான் சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதல், பக்கத்து நாடுகளின் மீதான நேரடி தாக்குதலாக பார்க்கப்பட்டது. இப்படி இருக்கையில், இது குறித்து 'மொஜ்தபா காமெனி' விளக்கமளித்திருக்கிறார். விளக்கத்தில், நாங்கள் பக்கத்து நாடுகளை தாக்கவில்லை. மாறாக, அங்கு இருக்கும் அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மீதுதான் தாக்குதல் நடத்தி வருகிறோம். இந்த தாக்குதல் மேலும் தொடரும் என்று கூறியிருக்கிறார்.
மேலும் அவர் கூறியதாவது, "மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அனைத்து ராணுவ தளத்தையும் அமெரிக்கா உடனடியாக மூட வேண்டும். எங்களின் எதிரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, ஹர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். அதேபோல போரில் கொல்லப்பட்ட ஈரானிய அப்பாவி மக்களுக்காக பழி வாங்கப்படும். அமெரிக்காவிடமிருந்து இழப்பீடு பெறும் வரை இந்த போர் தொடரும்" என்று கூறியிருக்கிறார்.
பிப்ரவரி 28 அன்று தெஹ்ரானில் நடைபெற்ற அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில், மொஜ்தபா காமெனியின் தந்தை கொல்லப்பட்டபோது, மொஜ்தபா காமெனி காயமடைந்ததை ஈரானிய அதிகாரிகள் கூறியிருந்தனர். இதனையடுத்து 88 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர்கள் சபையால் மோஜ்தபா தலைமைப் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
இதுக்கு ஒரு எண்டே கிடையாதா.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போர் இந்திய இழந்தது என்ன..? -
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு! -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
“இந்தப் போரால் ஒரே ஒரு நல்லது நடக்கும்”.. ஈரான் - இஸ்ரேல் போர் பற்றி வைரமுத்து கவிதை! -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ -
நிலவில் மீண்டும் கால் வைக்கும் மனிதர்கள்.. 53 ஆண்டுக்கு பிறகு மற்றொரு சரித்திரம் படைக்கும் அமெரிக்கா -
ரூபாய் மதிப்பு 100-ஐ தாண்டுமா? ஆர்பிஐ களத்தில் இறங்கியும் பலன் கிடைக்காத நிலை!












Click it and Unblock the Notifications