For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க சிறைச்சாலையில் பேய்ய்ய்!! ஐபோனில் பதிவான உருவத்தால் தம்பதியர் அதிர்ச்சி!

Google Oneindia Tamil News

அல்கட்ராஸ்: அமெரிக்காவில் சுற்றுலா சென்ற சிறைச்சாலையில் எடுத்த போட்டோவில் பெண் உருவம் ஒன்று பதிவானதால் தம்பதியினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சான் பிரான்சிஸ்கோ கடற்கரையில் உள்ளது அல்கட்ராஸ் தீவு.

இந்த தீவில் அல்கட்ராஸ் மத்திய சிறைச்சாலை ஒன்று உள்ளது. இது பிரபல சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.

Is this a ghost lurking in Alcatraz prison cell?

சிறைச்சாலை சுற்றுலா:

கடந்த 1934 ஆம் ஆண்டு முதல் 1963 ஆம் ஆண்டு வரை இந்த சிறைச்சாலை இயங்கி வந்தது. தற்பொழுது, இந்த சிறைச்சாலைக்கு சுற்றுலா செல்பவர்கள் அங்கு புகைப்படங்களை எடுத்து கொள்கிறார்கள்.

போட்டோ எடுத்த ஆசிரியர்:

இந்த சிறைக்கு ஷீலா சில்லெரி வால்ஷ் என்ற உதவி ஆசிரியர் தனது கணவர் பால் ரைஸ் உடன் சுற்றுலா சென்றுள்ளார். அவர் தன்னிடம் இருந்த ஐபோன் வழியே சிறைச்சாலையில் உள்ள பார்வையாளர்கள் பகுதி வழியே படம் பிடித்துள்ளார். எடுத்த படத்தை பார்த்தபொழுது அதில் ஒரு பெண்ணின் படம் இருந்துள்ளது.

ஐபோனில் பதிவான பேய்:

இதனால் திகைத்து போன அவர், மறுபடியும் தான் படம் எடுத்த பார்வையாளர் பகுதியை பார்த்துள்ளார். ஆனால் அங்கு யாரும் இல்லை. அதிர்ச்சியில் இருந்த ஷீலா தான் எடுத்த புகைப்படத்தை தனது கணவர் ரைசிடம் காட்டியுள்ளார்.

நம்பாத கணவர்:

அதனுடன் அது பெண் பேய் ஒன்றின் புகைப்படம் என கூறியுள்ளார். ஆனால், பேய், பிசாசு மீது நம்பிக்கை இல்லாத ரைஸ் அது ஷீலாவின் பிரதிபலிப்பு என தெரிவித்துள்ளார். புகைப்படத்தை பார்த்த பின்பு அதில் இருந்த வித்தியாசமான காட்சி அவரது நம்பிக்கையை தகர்த்துள்ளது. அதன் பின்பு ஷீலாவின் ஆர்வம் சுற்றுலா மீது இல்லை.

முதலில் நம்பவில்லை:

இது குறித்து கூறிய ரைஸ், "முதலில் புகைப்படத்தை பார்த்தபொழுது எனக்கு அது எனது மனைவியின் பிரதிபலிப்பு என தோன்றியது. ஆனால் மிக அருகில் வைத்து பார்த்தபொழுது இது வேறு மாதிரியானது என தெரிய வந்தது.

ஆச்சரியம் தரும் ஆடை அமைப்பு:

அந்த பெண்ணின் தலைமுடி மற்றும் உடை ஆகியவை வேறு காலகட்டத்தை சேர்ந்தது. அந்த பெண் 1930 அல்லது 1940 ஆண்டுகளை சேர்ந்தவளாக இருக்க கூடும். படத்தில் இருந்த பெண்ணை குறித்து விளக்கம் தர என்னிடம் ஒன்றும் இல்லை. இது ஆச்சரியம் தருகிறது.

நம்பிக்கையை ஏற்படுத்திய படம்:

அந்த பெண் தெரிந்த முகம்போன்று கேமிராவை நோக்குகிறாள். பேய் மீது நம்பிக்கை இல்லாதவன் நான். ஆனால், தற்பொழுது சிறிதளவு நம்பிக்கை வருகிறது. இந்த புகைப்படத்தில் இருப்பது பேய் தான் என நான் நினைக்கிறேன்" என ரைஸ் தெரிவித்துள்ளார்.

விவரங்கள் தெரியவில்லை:

இந்த தம்பதியர் புகைப்படத்தில் உள்ள பேய் பெண் குறித்து அறிய முயற்சித்துள்ளனர். அந்த சிறையில் உள்ள ஊழியர்களிடம் இது குறித்து கேட்டு உள்ளனர். ஆனால், சிறைச்சாலையில் ஊழியர்களாக பணிபுரிந்த முன்னாள் பணியாளர்களுக்கு அந்த பெண் குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை.

சிறையின் பறவை மனிதன்:

இந்த பெண் எதற்காக எனது புகைப்படத்தில் வந்து உள்ளார் என்பது குறித்து அறிவதில் அதிக ஆர்வம் ஏற்பட்டதாக ஷீலா தெரிவித்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க அல்கட்ராஸ் சிறைச்சாலையில் கொடூர குற்றவாளி அல் கேபோன் மற்றும் அல்காட்ராஜ் சிறையின் பறவை மனிதன் என அழைக்கப்படும் ராபர்ட் ஸ்ட்ரவ்டு ஆகியோர் இருந்துள்ளனர்.

மறுக்கும் அதிகாரிகள்:

சிறையில் பேய்கள் நடமாட்டம் இருப்பதை சிறை அதிகாரிகள் வெளிப்படையாக மறுத்தாலும், முன்னாள் சிறை பாதுகாவலர்களில் பலர் தங்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

English summary
A couple was left spooked after a ghostly figure appeared in one of their holiday photos. The eerie photo, taken by Sheila Sillery-Walsh, appears to show a mysterious woman visiting the notorious Alcatraz Federal Penitentiary in Alcatraz Island, off the coast of San Francisco, California.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X