Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜப்பான்காரங்க புத்திசாலிகள்தான்.. அதுக்காக இப்படி ஒரு முட்டாள்தனமா?.. ஆசிரியரின் அந்தோ பரிதாபம்!

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: நீச்சல் குளத்தில் கொரோனா கிருமிகள் வராமல் இருக்க இந்த ஜப்பான் ஆசிரியர் என்ன செய்திருக்கிறார் பாருங்க!

எப்போதும் உயரம் குறைவாக இருப்பவர்களை ஜப்பான் காரர்கள் என கிண்டல் செய்வது வழக்கம். ஆனால் குள்ளமாக இருக்கும் ஜப்பான் காரர்களின் கண்டுபிடிப்புகளோ அபாரம்.

ஹிரோஷிமா, நாகாசாகியில் ஏற்பட்ட பேரழிவிற்கு பிறகு ஜப்பான் நாட்டினர் தங்களது திறமையால் மெல்ல மெல்ல முன்னேறி இன்று வளத்தில் செழித்து விளங்குகிறார்கள்.

மூளை

மூளை

அது போல் மூளையை பற்றி பேசும் போது கூட சிலர் ஐன்ஸ்டீன் மூளை என வர்ணிப்பார்கள். மேலும் சிலர் உனக்கு ஜப்பான்காரன் மூளை என்பார்கள். அந்த வகையில் அதற்கு எதிர்மறையாக அந்நாட்டு ஆசிரியர் ஒருவர் நடந்து கொண்ட சம்பவம் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

ஜப்பான் பள்ளி

ஜப்பான் பள்ளி

ஜப்பானில் ஒரு பள்ளியில் தண்ணீர் கட்டணம் 27 ஆயிரம் டாலர் வந்ததை அடுத்து பள்ளி நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். என்னவாக இருக்கும் என ஆய்வு செய்தனர். அப்போது நீச்சல் குளம் முழுக்க தண்ணீர் இருந்தது. கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை சுமார் 4000 டன் தண்ணீர் நீச்சல் குளத்தில் வீணாக இருந்து வந்துள்ளது.

கொரோனா

கொரோனா

கொரோனாவின் போது பள்ளிகள் மூடப்பட்டதால் அனைத்து குழாய்களும் மூடப்பட்டுவிட்டன. எனினும் இது எப்படி நடந்தது என தெரியாமல் விழித்தனர். பின்னர்தான் தெரிந்தது இது ஒரு டீச்சரின் வேலையாம். பொதுவாக தண்ணீரில் உள்ள கிருமிகளை அழிக்க குளோரின் மருந்தை கலந்து பயன்படுத்துவர்.

குளோரின் கலந்து மருந்து

குளோரின் கலந்து மருந்து

அது போல் நீச்சல் குளங்களில் குளோரின் மருந்தை கலந்து பில்டர் மூலம் தண்ணீரின் தரத்தை மேம்படுத்துவர். இதன் மூலம் எந்த கிருமிகளும் வராது. ஆனால் இந்த டெக்னிக் தெரியாத ஒரு ஆசிரியர், புதிய தண்ணீரை திறந்துவிட்டால் கொரோனா பரவல் ஏற்படாது என தவறாக நினைத்து நீச்சல் குளத்திற்கு செல்லும் தண்ணீர் குழாயை திறந்துவிட்டுள்ளார்.

தண்ணீர் நிரம்பும் போது

தண்ணீர் நிரம்பும் போது

தண்ணீர் நிரம்பும் போது இதை பார்த்த மற்றொரு ஆசிரியர் தண்ணீர் குழாயை மூடியுள்ளார். இது தண்ணீரை திறந்த ஆசிரியருக்கு தெரியவர, "யார்ரா அது முட்டாள்தனமாக தண்ணீரை முடியிருப்பது" என கேட்டுக் கொண்டு தண்ணீரை மீண்டும் திறந்துவிட்டார். இரு மாதங்களாக தண்ணீர் திறக்கப்பட்டதால் 4000 டன் நீர் வீணாகி யோகோசுகா நகரில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது.

11 முறை நிரப்பியிருக்கலாம்

11 முறை நிரப்பியிருக்கலாம்

இந்த தண்ணீரை வைத்து நீச்சல் குளத்தை 11 முறைக்கு மேல் நிரப்பியிருக்கலாம். எனவே மாவட்ட நிர்வாகம் தண்ணீர் கட்டணமாக 27 ஆயிரம் டாலர் அதாவது 3.5 மில்லியன் யென் நிர்ணயித்துள்ளது. இந்த பணத்தை சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் சூப்பர்வைசர்களிடம் இருந்து வசூலிக்க பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+