விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீதான பாலியல் வழக்கை கைவிட்ட ஸ்வீடன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீதான பாலியல் பலாத்கார வழக்கு கைவிடப்படுவதாக ஸ்வீடன் நாட்டு வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர்.

அமெரிக்க உளவுத் துறை ஆவணங்களை தனது விக்கிலீக்ஸ் பக்கங்களில் கசிய விட்டார் விக்கிலீக்ஸின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே. அமெரிக்காவின் கழுகு பார்வை இவர் மீது பாய்ந்தது.

Julian Assange rape investigation dropped by Swedish prosecutors

இந்த நிலையில், ஸ்வீடனிலுள்ள ஸ்டாக்ஹோம் நகருக்கு சென்றார் ஜூலியன் அசாஞ்சே. அந்தப் பயணத்தை ஏற்பாடு செய்த பெண் திடீரென ஒரு வழக்கு தொடுத்தார். தனது இருப்பிடத்தில் ஜூலியன் அசாஞ்சேவை தங்க வைத்ததாகவும் அப்போது தனது விருப்பமின்றி அவர் தன்னை பலாத்காரம் செய்ததாகவும் வழக்குத் தொடுத்தார்.

இரு தரப்பின் விருப்பத்தோடுதான் அந்தச் செயல் நடைபெற்றதாக ஜூலியன் அசாஞ்சே பதிலளித்தார். அமெரிக்கா இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஜூலியன் அசாஞ்சே கைது செய்து அமெரிக்காவுக்கு அனுப்புமாறு ஸ்வீடனுக்கு நெருக்கடி கொடுத்தது.

இதையடுத்து ஒரு திட்டமிட்டார் ஜூலியன் அசாஞ்சே. ஓடிச் சென்று லண்டனிலுள்ள ஈகுவடார் நாட்டு தூதரகத்தில் அடைக்கலம் புகுந்தார். தூதரக விதிமுறைப்படி அதற்குள் சென்று ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்ய எந்த நாட்டாலும் முடியவில்லை. 2012 முதல் 5 ஆண்டுகளாக தூதரகத்தில்தான் தஞ்சமடைந்துள்ளார் ஜூலியன் அசாஞ்சே.

இந்த நிலையில் பலாத்கார வழக்கை கைவிடுவதாக இவ்வழக்கை கையாண்ட ஸ்வீடன் தலைமை வழக்கறிஞர் மரியானே நை தெரிவித்துள்ளார். இங்கிலாந்திலிருந்து ஜூலியன் அசாஞ்சேவை இங்கிலாந்திலிருந்து வெளியேற்ற உள்ள நடைமுறை சிக்கல்கள் காரணமாக இம்முடிவை அவர் எடுத்துள்ளார். இதன் மூலம் 7 வருடங்களாக நடைபெற்ற வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

அதேநேரம், ஈக்குவெடார் தூதரகத்தை விட்டு அசாஞ்சே வெளியே வந்தால் லண்டன் போலீசார் வேறு வழக்கில் கைது செய்ய வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Julian Assange rape investigation dropped by Swedish prosecutors after seven years as Sweden's top prosecutor says she is dropping an investigation into a rape claim against him.
Please Wait while comments are loading...