ஆட்சி அமைக்க ரஜினியுடன் கூட்டணியா?... ஹார்வார்டில் கமல் பதில் இதுதான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: நானும் ரஜினியும் நண்பர்களாக இருக்கலாம். ஆனால் அரசியல் என்பது வேறு என்று கமல் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் புதியதொரு விளக்கத்தை கொடுத்தார். மேலும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ரஜினியுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஹார்வட் பல்கலைகழகத்தில் பிசினஸ் ஸ்கூல் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட பங்கேற்று பேசினார்.
நிகழ்ச்சி அரங்கத்தில் கமல்ஹாசன் வேட்டி, சட்டையில் வரும்போது "தலைவர் வாழ்க" என மாணவர்கள் முழக்கமிட்டனர்.

அப்போது கமல் பேசுகையில், 2018-ல் அரசியல் பயணத்தை தொடங்கும் நான், கிராமங்களில் இருந்து மாற்றத்தை தொடங்க இருக்கிறேன். இந்த மாற்றத்திற்கு அனைவரின் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறேன்.

பணியாற்ற போகிறேன்

பணியாற்ற போகிறேன்

தமிழகத்தில் தாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு கிராமத்தை தத்தெடுத்து பணியாற்றுகிறேன். தத்தெடுக்கும் கிராமங்களை முன்னோடி கிராமங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளேன். உங்களிடம் கையேந்தி வந்திருக்கிறேன்,பணத்திற்காக அல்ல; மிக சிறந்த கருத்துக்களை தாருங்கள்.

தேசியம் சார்ந்தது

தேசியம் சார்ந்தது

திராவிடம் என்பது இரண்டு அரசியல் கட்சி சார்ந்தது என நினைக்கிறார்கள். ஆனால் அது தேசியம் சார்ந்தது. தற்போது தமிழ்நாட்டு கட்சிகள் யாருடனும் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பில்லை. அதனால்தான் கட்சியில் இணையாமல், புதுக்கட்சியைத் தொடங்குகிறேன்.

கேள்வி கேட்க முடியாது

கேள்வி கேட்க முடியாது

ஓட்டுக்கு பணம் வாங்கினால், நமது பாக்கெட்டிலிருந்து அரசியல்வாதிகள் பணத்தை எடுக்கும்போது நாம் கேள்விகேட்க முடியாது - கமல்ஹாசன். அரசியலில் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டு இருக்க விரும்புகிறேன்.

காந்தி, பெரியார்

காந்தி, பெரியார்

தேர்தல் அரசியலைத் தாண்டி காந்தி, பெரியார் எனது ஹீரோக்கள். நான் வித்தியாசமானவர் எனக் கூறவில்லை; அரசியலில் வித்தியாசமானவனாக இருக்க விரும்புகிறேன். ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ரஜினியுடன் கூட்டணி அமைக்க மாட்டேன். மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்வேன் என்று கமல் பேசினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kamal hassan invited to give a key note address in Harvard University. He says his colour will not be a saffron. His heroes are Gandhi and Periyar. He wants to adopt villages.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற