மீண்டும் இன்டர்நெட்டை கலக்கி வரும் டான்சானியாவின் கிலி பாலி- நீமா.. குச்சியுடன் மாஸ் ஸ்டெப்!
டோடோமா: டான்சானியா நாட்டை சேர்ந்த இன்டர்நெட் பிரபலம் கிலி பாலும் அவரது தங்கை நீமா பாலும் இணைந்து கலா சாஸ்மா பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான டான்சானியா நாட்டின் பழங்குடியினத்தை சேர்ந்தவர் கிலி பால். இவரது சகோதரி நீமா. இருவரும் ரீல்ஸ் மூலம் இணையதளத்தை கலக்கி வருகிறார்கள்.
வெளிநாட்டை சேர்ந்தவர்களான இவர்கள் கோலிவுட், பாலிவுட் பாடல்களுக்கு நன்கு பொருந்தும்படியாக வாய் அசைத்து ரீல்ஸ் போட்டு பிரபலமாகினர்.

கால்நடைகள்
இவர்கள் இருவரும் கால்நடைகளை மேய்க்கும் தொழிலையும் செய்து வருகிறார்கள். இவர்களின் இந்த முயற்சிக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்திருந்ததோடு கியாரா அட்வானி, சித்தார்த் மல்ஹோத்ரா, எம்ரான் ஹாஷ்மி உள்ளிட்டோரும் பாராட்டியுள்ளனர்.

குடியரசுத் தினம்
இந்த ஆண்டு குடியரசுத் தினத்தின் போது இவர்கள் இந்திய நாட்டின் தேசிய கீதத்தை பாடியிருந்தனர். அது போல் பாலிவுட் பாடகி லதா மங்கேஷ்கர் காலமானதை அடுத்து அவருக்கு அவரது பாடல்களை பாடி மரியாதை செலுத்தினர். இவற்றை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி கிலி பாலுக்கு மன் கீ பாத்தில் பாராட்டு தெரிவித்தார்.

தாய்மொழி
தாய்மொழி வேறு என்றாலும் முற்றிலும் சம்பந்தமே இல்லாத இந்தி மொழியில் எப்படி பாடல்களை பாடுகிறீர்கள் என கிலி பாலிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பள்ளியில் படிக்கும் போதே எனக்கு இந்தி பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அது போல் இந்தி படங்களையும் பிடிக்கும். நீங்கள் ஒன்றை விரும்பிவிட்டால் அது நிச்சயம் அதை பாடுவதற்கோ வாயசைப்பதற்கோ கடினமாக இருக்காது என்றார்.

4.2 மில்லியன்
இவர்களை இன்ஸ்டாகிராமில் 4.2 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். தற்போது இவர்கள் பாலிவுட் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்கள். அமர் ஆர்ஷியால் பாடப்பட்ட இந்த பாடல் கடந்த 2016 இல் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த பாடல் பார் பார் தேகோ ஆல்பத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

குச்சியுடன் டான்ஸ்
இந்த பாடலுக்கு கிலி பால் கையில் குச்சியை வைத்து கொண்டு படுத்துக் கொண்டே ஒரு ஸ்டெப் போடுகிறார். அதை நீமா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது திடீரென கிலி பால் விழுந்துவிடுகிறார். எனினும் சமாளித்தபடியே குச்சியை பிடித்து கொண்டு முட்டி போட்டு கொண்டு ஒரு மூவ்மென்ட்டை செய்கிறார்.

நடனம்
பின்னர் அண்ணன், தங்கை இருவரும் சேர்ந்து நடனமாடுகிறார்கள். இவர்கள் இருவரது நடன வீடியோ வைரலாகி வருகிறது. இவர்களை நெட்டிசன்கள் வருங்கால சினிமா நட்சத்திரங்கள் என பாராட்டி வருகிறார்கள்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications