For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலிபான்கள் துப்பாக்கி சூட்டுக்கு பிறகு முதல் முறையாக பாகிஸ்தானில் கால் வைத்த மலாலா

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பெண் கல்விக்காக பாடுபட்ட மலாலா 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக பாகிஸ்தானுக்கு வந்துள்ளார்.

மலாலா யூசப்ஸாய் என்ற 20 வயது பெண்ணை யாராலும் மறக்க முடியாது. பாகிஸ்தானில் பிறந்த இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2012-ஆம் ஆண்டு பெண் கல்விக்காக பிரசாரம் செய்தார்.

இதற்கு பலனாக பாகிஸ்தானின் சுவாத் பள்ளத்தாக்கில் சக மாணவிகளுடன் பேருந்தில் வந்த மலாலாவை தலிபான்கள் கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் அவரது தலை மற்றும் முகத்தில் குண்டுகள் பாய்ந்தன.

கிரேட் பிரிட்டன்

கிரேட் பிரிட்டன்

இதைத் தொடர்ந்து மலாலா ஹெலிகாப்டர் மூலம் பாகிஸ்தானில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கோமா நிலைக்கு செல்லும் அபாயம் உள்ளதாக கூறி கிரேட் பிரிட்டனில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற பரிந்துரைத்தனர்.

பெண் கல்வி

பெண் கல்வி

இதைத் தொடர்ந்து மனம் தளராக மலாலா ஒரே வாரத்தில் எழுந்து நின்று செவிலியரின் உதவியுடன் நடக்கத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து பெண் கல்விக்காக அவர் ஒரு அறக்கட்டளையை தொடங்கினார்.

முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை

முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை

சிறிய வயதில் நோபல் பரிசு பெற்ற மலாலா சொந்த மண்ணான பாகிஸ்தானுக்கு வருதை கந்துள்ளார். பாதுகாப்பு கருதி இவரது வருகை முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

பாதுகாப்பு ஏற்பாடுகள்

பெனாசீர் பூட்டோ சர்வதேச விமான நிலையத்தில் உயர்மட்ட பாதுகாப்புடன் இன்று அதிகாலை அவர் வருகை தந்தார். பெண் கல்வியை வலியுறுத்துவது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காக்கன் அப்பாஸியை அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலாலாவின் வருகையையொட்டி பாகிஸ்தானில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

English summary
Nearly 6 years after being shot in the face and neck by the Taliban for advocating for the rights of girls, 20-year-old Malala Yousafzai returned Thursday to Pakistan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X