வாக்குச்சாவடிய கைப்பற்றிட்டாங்க.. மறுவாக்குப்பதிவு கோரி தேர்தல் ஆணையத்தை நாடிய மணிப்பூர் கட்சிகள்
இம்பால்: மணிப்பூரில் நடந்த சட்டசபைத் தேர்தலில் வாக்குப் பதிவில் முறைகேடு நடந்துள்ளதால் மறு வாக்குப்பதிவு நடத்தவேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளில் முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் மொத்தம் உள்ள 38 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
முதற்கட்ட தேர்தலில் 78.03 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்குப்பதிவின் போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். மணிப்பூரில் சில இடங்களில் வன்முறையும் ஏற்பட்டது.

வாக்குப்பதிவு
மணிப்பூரில் உள்ள 38 தொகுதிகளில் நேற்று காலை 6 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. முதற்கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி வரை 78.03% வாக்குகள் பதிவாகி உள்ளன. காங்போக்பியில் அதிகபட்சமாக 82.97% வாக்குகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து இம்பாலில் 82.19% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டு 86% வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகாரி உயிரிழப்பு
இந்நிலையில் மணிப்பூரில் சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள திபைமுக் சட்டமன்றத் தொகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நௌரெம் இபோச்சௌபா உயிரிழந்தார். காவலர் ஒருவரது சர்வீஸ் ரைஃபிள் எதிர்பாராத விதமாகத் தவறுதலாக வெடித்துச் சிதறியது. இதில் அவர் உயிரிழந்தார் என மாநில தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

முறைகேடு
நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில், சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள ஹெங்கெல்ப் தொகுதியில் 27 வாக்குப்பதிவு மையங்களில் முறைகேடு நடந்திருக்கிறது. கெய்ரோ தொகுதியின் எட்டு வாக்குப்பதிவு மையங்களில் முறைகேடு நடந்திருக்கிறது. அதனால் இங்கெல்லாம் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என மணிப்பூர் மாணவ அமைப்புகள் தெரிவித்துள்ளன.

புகார்
இதையடுத்து என்.பி.பி, காங்கிரஸ், சிவ சேனா, ஜேடி உள்ளிட்ட கட்சிகள் சுராசந்த்பூர் மாவட்டத்தில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருக்கின்றன. வாக்குப்பதிவின் போது வாக்குப்பதிவு மையங்களை சிலர் கைப்பற்றியதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். ஆட்சியில் இருக்கும் பாஜக எந்த புகாரும் கொடுக்கவில்லை.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications