For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து மலேசிய ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேசிய விமானம் உக்ரைன்- ரஷ்ய எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான செய்தியை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம்.

ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் "எம்ஹெச்17" இல் 15 விமானப் பணியாளர்கள் உட்பட 295 பேர் பயணித்தனர். அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Media Statement 1 - MH17 Incident

அதுபற்றிய அதிகாரபூர்வமான தகவலை சரியாக 12.30 மணியளவில் வெளியிட்டுள்ளது விமான நிறுவனம்.

அந்த அறிவிப்பில், "உக்ரைன் விமானக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கிடைத்த தகவலின்படி, மலேசியன் ஏர்லைன்ஸ் எம்ஹெச்17 விமானத்தின் கடைசி தொடர்பானது தமாக்கில் இருந்து 30 கிலோ மீட்டரில், ரஷ்யா-உக்ரைன் எல்லைப்பகுதியில் இருந்து தோராயமாக 50 கிலோ மீட்டர் தொலைவில் துண்டிக்கப்பட்டு விட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போயிங் 777 ரக விமானமான எம்ஹெச்17, ஆம்ஸ்டர்டாமில் இருந்து சரியாக 12.15 மணியளவில் கிளம்பியது. காலை 6.10 மணியளவில் கோலாலம்பூர் வந்தடைய வேண்டிய அவ்விமானம் வழியிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Malaysia Airlines confirms it received notification from Ukrainian ATC that it had lost contact with flight MH17 at 1415 (GMT) at 30km from Tamak waypoint, approximately 50km from the Russia-Ukraine border.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X