For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குறைந்த அளவு “ஆஸ்பிரின்” மாத்திரை புற்றுநோய்க்கு மருந்தாம் – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

Google Oneindia Tamil News

லண்டன்: நடுத்தர வயதினர் குறைந்த அளவில் ஆஸ்பிரின் மாத்திரியை தினசரி எடுத்துக் கொண்டால், புற்றுநோயிலிருந்து மீளலாம் என்று முன்னணி விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக நடந்த ஆய்வுகள் மற்றும் பரிசோதனையின் இறுதியில் இது தெரிய வந்துள்ளதாம்.

மேலும் குறைந்த திறன் கொண்டஆஸ்பிரின் மாத்திரைகளை நீண்ட காலம் எடுத்துக் கொண்டால் மிகப் பெரிய புற்று நோய் கூட கரைந்து போய் விடுமாம்.

Miracle pill aspirin could even ward off major cancers: Long-term use of the drug can cut chance of developing disease by up to a third

மூன்றில் ஒருவர்:

உலக அளவில் புற்று நோய்க்குப் பலியாவோரில் மூன்றில் ஒரு பங்குப் பேரை இப்படிக் காப்பாற்ற முடியுமாம்.

ஆஸ்பிரின் மாத்திரை:

ஏற்கனவே இதய நோய் உள்ளவர்கள் மிகக் குறைந்த அளவில் ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்டவர்களுக்கும் கூட புற்று நோய் பாதிப்பு குறையுமாம்.

10 வருடத்திற்கு:

இங்கிலாந்தில் 50 வயது முதல் 64 வயது வரை உள்ளவர்களில் 10 வருடத்திற்கு ஆஸ்பிரின் மாத்திரிகளைச் சாப்பிட்டால் வருடத்திற்கு 4000 ஆண்களையும், 2000 பெண்களையும் காப்பாற்ற முடியும் என்கிறது இந்த ஆய்வு.

புற்று நோயாளிகள்:

மேலும் பத்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 357 புற்றுநோயாளிகளையும் குணப்படுத்த முடியுமாம்.

குறைந்த அளவு:

அதேபோல இதய நோய் இல்லாதவர்கள் குறைந்த அளவில் ஆஸ்பிரின் சாப்பிட்டு வந்தால் மாரடைப்பிலிருந்து சற்று தப்ப முடியும் என்பதும் இந்த ஆய்வின் பரிந்துரையாகும்.

அதே நேரம் ஜாக்கிரதை:

அதேசமயம், அதிக அளவில், அதிக திறன் கொண்ட ஆஸ்பிரின் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் இறப்பானது 20 வருடங்களில் 18,000 ஆக மட்டுமே இருக்கும் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. ஆஸ்பிரின் சாப்பிடுவதால் ரத்த கசிவு மற்றும் பக்கவாதம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆய்வுக் குழு அறிக்கை:

லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த க்வீன் மேரி புற்றுநோய்த் தடுப்பு மையத்தின் தலைவர் பேராசிரியர் ஜேக் குசிக் என்பவரின் தலைமையிலான குழுதான் இந்த ஆய்வை மேற்கொண்டது.

தடுக்க போதுமானது:

வழக்கமாக உள்ள 300 மில்லி கிராம் ஆஸ்பிரினுக்குப் பதில் 75 மில்லிகிராம் ஆஸ்பிரினை எடுத்துக் கொள்ள இந்தக் குழு பரிந்துரைக்கிறது. புற்றுநோயைத் தடுக்க இது போதுமானது என்பதும் இவர்களின் பரிந்துரையாகும்.

விரைவில் நல்ல செய்தி:

இதுதொடர்பாக மேலும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டியுள்ளது என்று கூறும் ஜேக், விரைவில் இதில் நல்ல செய்தி கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

English summary
Healthy middle-aged people should be encouraged to take low-dose aspirin every day to ward off cancer, a leading scientist has said. A major review of trials and studies has shown long-term use of the drug cuts the risk of developing major CANCERS and dying from them by around a third. And those with heart problems already taking a low dose to prevent recurrence of their condition would also gain from its anti-cancer properties.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X