For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூர்ய சக்தி கூட்டமைப்புக்கு இந்தியா சார்பில் ரூ.200 கோடி நிதி வழங்கப்படும்: பாரீசில் மோடி பேச்சு

By Karthikeyan
Google Oneindia Tamil News

பாரீஸ்: சூர்ய சக்தி கூட்டமைப்புக்கு இந்தியா சார்பில் ரூ.200 கோடி நிதி வழங்கப்படும் என்று பருவ நிலை மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பருவநிலை மாற்றம் மற்றும் புவிவெப்பமயமாதல் தொடர்பான ஐ.நா. சர்வதேச மாநாடு, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது. இம்மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 150 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார்.

Modi speaking at the launch of International Solar Alliance

அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்த பின்னர் மோடி அளித்த பேட்டியில், சூரிய சக்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் 121 நாடுகளுடன் இணைந்து புதிய அமைப்பு உருவாக்கப்படும். இந்த அமைப்பை பிரான்ஸ் அதிபருடன் இணைந்து துவங்கி வைக்க உள்ளேன். பருவநிலை மாற்றத்திற்கு தீர்வு காண இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கையை இந்தியா தலைமை தாங்கி நடத்தும்.

உலகையும், மக்களையும் பிரித்துப்பார்க்க முடியாது. வருங்கால உலகம் நம் கையில் உள்ளது. வளர்ந்த நாடுகள் தங்கள் உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும். பருவ நிலை மாற்றங்களுக்கு எதிரான போராட்டாம் என்ற சுமையை தங்களின் தோள்களில் சுமப்பது உலக நாடுகளின் கடமை. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அனைவருக்கும் எளிதாக கிடைக்கச்செய்ய வேண்டும்.

உலக வெப்பமயமாதலை எதிர்கொள்ள உலக நாடுகளின் உதவி தேவை. சூரியசக்தி அனைவருக்கும் எளிதாகவும், நம்பிக்கையாகவும் கிடைப்பதற்கு கூட்டு முயற்சி முக்கியம். சர்வதேச சூர்யசக்தி கூட்டணியை இந்தியா உருவாக்கும். சூர்யசக்தி தயாரிப்பில் ஆராய்ச்சிகள், புதிய கண்டுபிடிப்புகள், சேவை பரிமாற்றத்தில் சர்வதேச ஒத்துழைப்பு வேண்டும்.

சர்வதேச சூர்யசக்தி கூட்டமைப்புக்கான அமைப்பிற்கான கட்டடம் கட்ட இந்தியா இடம் வழங்கும். சர்வதேச சூர்யசக்தி கூட்டமைப்புக்கு இந்தியா சார்பில் 200 கோடி ரூபாய் நிதி வழங்க தயாராக உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

English summary
PM Narendra Modi says india have provide 200 crore for National Institute of Solar Energy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X