For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரொம்ப ரிஸ்க்.. வியட்நாமை கலங்கடிக்கும் கொரோனா "வேரியண்ட்".. இதுவரை தோன்றியதிலேயே மோசமானது.. ஏன்?

Google Oneindia Tamil News

ஹனோய்: வியட்நாமில் பரவி வரும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் அதிக ஆபத்து கொண்டது என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Recommended Video

    Vietnam-ல் பரவும் கொடிய Corona New Strain | Oneindia Tamil

    2020ல் கொரோனாவை வென்ற முக்கியமான நாடு வியட்நாம். அமெரிக்காவிற்கே உதவி பொருட்களை அனுப்பும் அளவிற்கு வியட்நாம் கொரோனாவை வென்று, தளர்வுகளை அறிவித்தது. ஆனால் கடந்த ஏப்ரலில் இருந்து கொரோனாவிடம் அந்த நாடு திணறிக்கொண்டு இருக்கிறது.

    கடந்த 2020ல் மொத்தமாக ஏற்பட்ட கேஸ்களை விட அதிக கேஸ்கள் வியட்நாமில் கடந்த ஏப்ரலுக்கு பின் ஏற்பட்டது. அங்கு ஏப்ரலுக்கு பின் 3500க்கும் அதிகமான கேஸ்கள் வந்தது. 47 மரணங்கள் ஏற்பட்டது.

    அதிகம்

    அதிகம்

    வியட்நாமில் உள்ள 63 முனிசிபாலிட்டிகளில் 30ல் கொரோனா பரவிவிட்டது. வியட்நாமில் புதிய மோசமான உருமாறிய கொரோனா வைரஸ் உருவாகி இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுதான் அதிகரிக்கும் கொரோனா கேஸ்களுக்கு காரணம். இரண்டு விதமான கொரோனா வைரஸ்கள் மியூட்டேட் ஆகி, உருவான புதிய ஹைபிரிட் வகை கொரோனா அங்கு பரவி வருகிறது.

    காரணம்

    காரணம்

    இந்தியாவில் பரவிய b1.617 என்று அழைக்கப்படும் கொரோனா வகை, யுகேவில் பரவிய b117 வகை இரண்டும் ஒன்றாக சேர்ந்து உருவான புதிய வகை ஹைபிரிட் வேரியண்ட்தான் இந்த புதிய வியட்நாம் வகை கொரோனா என்று கூறப்படுகிறது. இந்த புதிய வகை கொரோனா காற்றில் வேகமாக பரவும் திறன் கொண்டது என்று வியட்நாம் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    தகவல்

    தகவல்

    வியட்நாமில் பரவும் இந்த புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. வியட்நாம் அரசு வெளியிட்டு இருக்கும் இந்த புதிய தகவல்கள் அச்சமூட்ட கூடியதாக உள்ளது. அதன்படி இதன் ஜீனோமை வியட்நாம் ஆராய்ச்சியாளர்கள் சோதனை செய்து வருகிறார்கள். விரைவில் இது குறித்த விவரங்கள் வெளியிடப்படும்.

    உடல்

    உடல்

    இந்த புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உடலுக்குள் வேகமாக பெருகும். பொதுவாக உடலுக்குள் செல்லும் கொரோனா வைரஸ் அடுத்தடுத்து புதிய வைரஸ்களை உருவாக்கும். இதுதான் நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளை இந்த வைரஸ் வேகமாக தாக்க காரணம். இப்படி கொரோனா வைரஸ் பிரதி எடுக்கும் வேகம் உருமாறிய கொரோனா வைரஸ்களில் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.

    பிரதி

    பிரதி

    தற்போது வியட்நாமில் பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் மிக வேகமாக பிரதி எடுத்துக்கொள்வதாக வியட்நாம் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதனால் இந்த வைரஸ் உடலுக்குள் வந்தவுடன் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதோடு இந்த வைரஸ் காற்றில் வேகமாக பரவுகிறது என்று ஏற்கனவே கூறப்பட்டது.

    மாஸ்க்

    மாஸ்க்

    இதனால் தற்போது மாஸ்க் விதிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மீறி இந்த வைரஸ் பரவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள். காற்றில் வேகமாக பரவுவதால் அதிக தூரத்தில் உள்ள கொரோனா நோயாளிகள் கூட கொரோனாவை பிறருக்கு பரப்ப முடியும். இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட வேரியண்ட்களை விட இது காற்றில் வேகமாக பரவுகிறது.

    ரிஸ்க்

    ரிஸ்க்

    இதுதான் இருப்பதிலேயே அதிக ரிஸ்க் ஆன கொரோனா வேரியண்ட் என்று என்று வியட்நாம் அரசு தெரிவித்துள்ளது. ஏனென்றால் இது தொண்டையில் அதிக அளவில் அடர்த்தியாக தாக்குகிறதாம். இதற்கு முன் கொரோனா இவ்வளவு அடர்த்தியாக ஒரே இடத்தில் தாக்கியது இல்லை என்கிறார்கள். இது வயதானவர்களை அதிகம் தாக்கும்.

    உடல் நோய்

    உடல் நோய்

    முக்கியமாக ஏற்கனவே உடலில் நோய் உள்ளவர்கள், வேக்சின் எடுக்காதவர்களை அதிகம் தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட் இன்னும் மற்ற நாடுகளுக்கு பரவவில்லை. ஆனால் வியட்நாமில்தான் இது உருவானது என்று சொல்ல முடியாது என்பதால் அண்டை நாடுகளிலும் இந்த புதிய வேரியண்ட் இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

    English summary
    More risk and higly contagious that can spread in air: Why new Coronavirus strain found in Vietnam is scary?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X