For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெளிநாட்டுவாழ் தமிழர்களுக்கு ஓட்டுரிமை.. எம்பி திருச்சி சிவாவிடம் பஹ்ரைன் அமைப்பு கோரிக்கை

வெளிநாட்டுவாழ் தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்குமாறு நாடாளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டும் என்று இந்தியன் சோசியல் போரம் பஹ்ரைன் தேசியத் தலைவர் ஜவாத் பாஷா ராஜ்ய சபா எம்பி திருச்சி சிவாவிடம் கோரிக்கை வைத்

Google Oneindia Tamil News

பஹ்ரைன்: அண்மையில் பஹ்ரைன் சென்ற திமுக ராஜ்ய சபா எம்பி திருச்சி சிவாவை இந்தியன் சோசியல் போரம் பஹ்ரைன் தேசியத் தலைவர் ஜவாத் பாஷா சந்தித்தார். அப்போது வெளிநாடு வாழ் தமிழர்கள் குறித்து பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

திருச்சி சிவாவுடனான சந்திப்பின் போது ஈரானில் தவித்த மீனவர்கள் மீட்பு குறித்து இந்தியன் சோசியல் போரம் பஹ்ரைன் சார்பாக பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், எஸ்.டி.பி.ஐ கட்சியின் நீண்டகால கோரிக்கையான வெளிநாட்டு வாழ் தமிழர்களின் நலனுக்காக தனி வாரியம் அமைக்க தமிழக அரசை வலியுறுத்த வேண்டும்.

ஓட்டுரிமை

ஓட்டுரிமை

வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டும். வெளிநாட்டு வாழ் தமிழ் தொழிலாளர்கள் குறிப்பாக மீனவர்கள் நலன் சார் பிரச்சனைகளில் விரைந்து செயல்பட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

உறுதி

உறுதி

சிறும்பான்மையினர் நலன் சார் பிரச்சினைகளில் வழமைபோல் வலுவாக திராவிட முன்னேற்றக் கழகம் துணை நிற்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் திருச்சி சிவாவிடம் பஹ்ரைன் அமைப்பினர் முன் வைத்தனர். இதனைக் கேட்டுக் கொண்ட திருச்சி சிவா, நிச்சயம் கோரிக்கைகள் நிறைவேற துணை இருப்பதாக கூறினார்.

தனி வாரியம்

தனி வாரியம்

மேலும், திமுக ஆட்சி அமையும் போது வெளிநாட்டு வாழ் தமிழர்களின் நலனுக்காக தனி வாரியம் அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார். இச்சந்திப்பின் போது திமுக பஹ்ரைன் மண்டலத் தலைவர் சாதிக் மற்றும் மண்டல நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பங்கேற்பு

பங்கேற்பு

இந்தியன் சோசியல் போரம் பஹ்ரைன் தேசிய பொதுச் செயலர் அஹமது இப்ராஹிம் தமிழ் மாநிலத் தலைவர் அப்துல் கரீம், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் ஹசன், பீர் முஹம்மத், ஹசன், ஆசிக் ஆகியோர், இந்தியன் பெர்டானிடி போரம் தேசியத் தலைவர் ஜமால் மொய்யுதீன், தமிழ் மாநிலத் தலைவர் பெரோஸ்கான், செயலாளர் தௌபிக், ஊடக மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் அபூபக்கர் சித்தீக் ஆகியோரும் உடனிருந்தனர்.

English summary
Rajya Sabha MP Trichy Siva visited Bahrain and met Bahrain social forum leaders and members.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X