For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"சூப்பர்நோவா" விண்மீன் வெடிப்பை சூப்பராகப் படம் பிடித்த நாசாவின் "ஹப்பிள்"

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: சூப்பர் நோவா எனப்படும் நட்சத்திர வெடிப்பு ஒன்றை படம் பிடித்துள்ளது நாசாவின் ஹப்பிள் விண்கல தொலைநோக்கி. சூப்பர் நோவா ஒன்றினைப் படம் பிடிப்பது இதுவே முதல் முறை என்பதால் இது பெரும் வியப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது உள்ள மனித குலத்திற்கு இந்த சூப்பர்நோவாவைப் படம் பிடிப்பது என்பது இதுவே முதல் முறையாகும். காரணம், இந்த மாதிரியான ஒரு வெடிப்பானது 100 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகக் கருதப்படுகிறது.

எனவேதான் தற்போதைய மனித குலத்திற்கு இதுதான் முதல் முறையாகும். இது விஞ்ஞானிகளின் ஆர்வத்தைத் தூண்டி விட்டுள்ளது.

சூப்பர் நோவா...

சூப்பர் நோவா...

வானில் உள்ள நட்சத்திரங்கள் பெரும்பாலும் கடைசியில் அழியும்போது அதி பிரகாசமாக மாறி வெடித்துச் சிதறும். இதைத்தான் சூப்பர் நோவா என்பார்கள். இந்த வெடிப்பு நிகழ முக்கியக் காரணம், அந்த நட்சத்திரத்தின் நிறை அளவுக்கு அதிகமாக கூடுவதே ஆகும்.

அதிக பிரகாசமாக...

அதிக பிரகாசமாக...

இந்த நிகழ்வையே சூப்பர்நோவா என்கிறோம். அது மிக மிக பிரகசாசமாக இருக்கும். நட்சத்திரத்தின் தன்மை மாறுபடும்போது இரண்டு வகைகளில் சூப்பர்நோவா உருவாகும். அவைகளில் ஒன்று, சாகும் தருவாயில் இருக்கும் நட்சத்திரம் வெடிப்பது.

மற்றொரு வகை...

மற்றொரு வகை...

மற்றொன்று, இன்னும் சில பில்லியன் வருடங்களில் சூரியன் சாகும் பொழுது அது தனது வெளிப்புறத்தை உதிர்த்துவிடுவதால் மிகுந்த வெப்பமான அதன் உட்பகுதி மட்டுமே இருக்கும். முன்பிருந்த சூரியனை விட இப்பொழுது உட்பகுதி மட்டும் கொண்ட சூரியனின் எடை பாதி இருக்கும். ஆனால் அது பூமியைப் போன்று அளவில் சிறியதாக இருக்கும்.

வொயிட் ட்வார்ப்...

வொயிட் ட்வார்ப்...

இயற்கையில் சூரியன் பூமியை விட பல மடங்கு பெரியது. சூரியனை நிறப்ப பத்து லட்சம் பூமி வேண்டும். இதைத் தான் வொயிட் ட்வார்ப் என்று சொல்லுவார்கள். இது மாதிரியான வொயிட் ட்வார்ப் நட்சத்திரங்கள் சூரியனைப் போன்ற சாதாரண நட்சத்திரங்களைச் சுற்றும் பொழுது அவை அந்த நட்சத்திரங்களிலிருந்து மூலப்பொருட்களை இழுக்கும். இவ்வாறு வந்து சேரும் பொருட்கள் அதன் மேல் படியத் துவங்கும். பின்னர் நாளடைவில் எடை அதிகரிக்கும் போது அவை வெடிகுண்டு போல வெடித்துசிதறும். இதுவும் சூப்பர்நோவா தான்.

அரிது... அரிது...

அரிது... அரிது...

இதுவரை சூப்பர்நோவா எதையும் நாம் படம் பிடித்தில்லை. நமது கண்ணுக்கு அது தெரிவது என்பதும் கூட அரிதிலும் அரிதாகும்.

ஹப்பிள்...

ஹப்பிள்...

இந்த நிலையில் டிசம்பர் 11ம் தேதி ஒரு சூப்பர்நோவா வெடித்துச் சிதறுவதைப் படம் பிடித்துள்ளது ஹப்பிள். முன்கூட்டியே அதைக் கணித்து காத்திருந்து படம் பிடித்துள்ளது அது.

நாசா தொலைநோக்கி...

நாசா தொலைநோக்கி...

ஹப்பிள் தொலைநோக்கி 1990 ஏப்ரல் 24- ல் நாசாவால் விண்ணில் ஏவப்பட்டது ஆகும். இது கடந்த 25 ஆண்டுகளாக விண்ணில் நிகழும் பல அற்புதங்களைக் குறித்த தகவல்களை நமக்கு தந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ரெப்ஸ்டால்...

ரெப்ஸ்டால்...

தற்போது வெடித்துச் சிதறியுள்ள அந்த விண்மீனுக்கு ரெப்ஸ்டால் என்று பெயராகும். நார்வே நாட்டு விண்வெளி வீரர் ஸ்ஜர் ரெப்ஸ்டால் என்பவரின் பெயரையே இதற்கு சூட்டியுள்ளனர். இவர்தான் கடந்த நவம்பர் மாதம் இதை கண்டுபிடித்தார்.

முதல்முறையாக...

முதல்முறையாக...

முதல் முறையாக படம் பிடிக்கப்பட்ட சூப்பர்நோவா என்பதால், இது உலகம் முழுவதும் விஞ்ஞானிகளிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நட்சத்திரங்கள் தோன்றுவது இப்படித்தான்...

வயதான நட்சத்திரங்கள் மற்றும் இளம் நட்சத்திரங்களை சுற்றி மிகவும் அடர்த்தியான மேகக்கூட்டங்களில் புதிய நட்சத்திரங்கள் உருவாகின்றன. இந்தப் புதிய நட்சத்திரங்கள் உருவாகிறபோது தீவிர வெப்பத்திலான மிகப்பிரகாசமான ஒளிப்பிரளயம் வெளியிடப்படுகிறது.

English summary
Hubble telescope has captured images of the first ever predicted supernova blast, which actually happened 10 billion years ago.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X