For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று தெரிந்துவிடும்.. இந்தியாவை விடாமல் சீண்டும் நேபாளம்.. விஸ்வரூபம் எடுக்க போகும் மேப் அரசியல்!

Google Oneindia Tamil News

காத்மாண்டு: இந்தியாவில் இருக்கும் பகுதிகளை தங்கள் நாட்டில் இருக்கும் பகுதிகளாக காட்டி நேபாளம் புதிய மேப் ஒன்றை கடந்த சில நாட்கள் முன் வெளியிட்டது. இதற்கான சட்ட திருத்த மசோதா அங்கு இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

இந்தியா சீனா பிரச்சனை ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்தியா மற்றும் நேபாளம் இடையில் பிரச்சனை நடந்து வருகிறது. இந்தியா நேபாளம் இடையே புதிய வரைபடம் காரணமாக சண்டை நடந்து வருகிறது.

இந்தியா நேபாளம் இடையே நடக்கும் இந்த பிரச்சனைக்கு காரணம் லிபு லேக் பகுதிதான். அங்கு இந்தியா சாலை அமைத்து சில கட்டுமான பணிகளை மேற்கொண்டது. அங்கு இருக்கும் கிராமங்களை முன்னேற்றும் வகையில் இந்தியா சாலை அமைத்தது .

இ பாஸ் தேவையில்லை.. அப்படியும் கர்நாடகாவிற்குள் தமிழக வாகனங்கள் நுழைய முடியவில்லை.. ஏன் தெரியுமா?இ பாஸ் தேவையில்லை.. அப்படியும் கர்நாடகாவிற்குள் தமிழக வாகனங்கள் நுழைய முடியவில்லை.. ஏன் தெரியுமா?

சண்டை

சண்டை

ஆனால் இந்த சாலைக்கு நேபாளம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் அதோடு நிற்காமல் இந்தியாவை மிக கடுமையாக நேபாளம் விமர்சிக்க தொடங்கியது. எல்லையில் லிபு லேக், லம்பியாதூரா, கலபாணி ஆகிய பகுதிகள் நேபாளுக்கு சொந்தமானது. இங்கு இந்தியா ஆக்கிரமித்துள்ளது என்று நேபாளம் பிரதமர் கேபி சர்மா ஒளி தெரிவித்து வருகிறார். இந்த இடங்களை நாங்கள் மீட்டு எடுப்போம் என்று நேபாளம் கூறியது.

கடும் கண்டனம்

கடும் கண்டனம்

அதோடு நேபாளத்தில் கொரோனா இந்தியாதான் காரணம். அண்டை நாடுகள் இடையே இந்தியா அத்துமீறலை நிகழ்த்தி வருகிறது. அண்டை நாடுகளை இந்தியா சரியாக நடத்தவில்லை என்று நேபாளம் பிரதமர் சர்மா ஒலி தெரிவித்து இருந்தார். இதனால் இரண்டு நாட்டு உறவில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டது. மே 8ம் தேதியில் இருந்து கடந்த ஒரு மாதமாக இந்த சண்டை நடந்து வருகிறது.

வரைபடம் வெளியிட்டது

வரைபடம் வெளியிட்டது

இந்த நிலையில் இந்தியாவை சீண்டும் வகையில் நேபாளம் புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டது. இதற்கான சட்ட திருத்த மசோதாவை அந்நாடு உருவாக்கி உள்ளது. இந்தியாவில் இருக்கும் லிபு லேக், லம்பியாதூரா, கலபாணி ஆகிய பகுதிகளை நேபாளம் உள்ளே கொண்டு வந்து வரைபடமாக அந்த நாடு வெளியிட்டது. இதை இன்று அந்நாட்டின் இரண்டு அவைகளிலும் தாக்கல் செய்ய பிரதமர் சர்மா முடிவு செய்துள்ளார்.

வழிக்கு வந்த கட்சிகள்

வழிக்கு வந்த கட்சிகள்

முதலில் இந்த மேப் தொடர்பான சட்ட திருத்த மசோதாவிற்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்கவில்லை.இதனால் கீழவையில் மசோதாவை நிறைவேற்ற போதுமான பலம் இன்றி இருந்தார் பிரதமர் சர்மா. ஆனால் தொடர் பேச்சுவார்த்தை மூலம் சர்மா தற்போது எதிர்கட்சிகளை தனது வழிக்கு கொண்டு வந்துள்ளார். புதிய மேப் தொடர்பான சட்ட திருத்த மசோதாவை அந்நாட்டு எதிர்க்கட்சிகளும் ஆதரிக்க தொடங்கி உள்ளது.

எப்போது ஒப்புதல்

எப்போது ஒப்புதல்

இன்று இந்த சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு நாட்கள் விவாதம் நடக்கும். அதன்பின் அந்த மசோதா நிறைவேறும் என்று கூறுகிறார்கள். இன்று இதன் முடிவு ஏறத்தாழ தெரிந்துவிடும் என்கிறார்கள். இந்தியாவை பகுதியை நேபாளம் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று குறிப்பிட்டால் அது பெரிய பிரச்னைக்கு வழி வகுக்கும். இரண்டு நாட்டு உறவை மொத்தமாக பாதிக்கும்.

Recommended Video

    ட்ரம்புக்கு செக்! அமெரிக்காவுக்கே இந்த கதியா? அல்லாடும் அமெரிக்கர்கள்!
    கடும் சிக்கல்

    கடும் சிக்கல்

    இந்தியா - நேபாளம் இடையே இந்த மேப் பிரச்சனை மிகப்பெரிய அளவில் வெடிக்கும். இதனால் மொத்தமாக இரண்டு நாட்டு உறவு முறியும் அபாயம் உள்ளது என்கிறார்கள். இந்தியாவில் கலகத்தை ஏற்படுத்த முயன்று பிரதமர் சர்மா இப்படி செய்து வருகிறார் என்று புகார் உள்ளது. அவருக்கு பின் சீனா இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். நேபாளத்தை சீனா இயக்கலாம் என்று கூறுகிறார்கள்.

    English summary
    Nepal parliament all set to pass the amendment bill on its map against India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X