For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கைதிகள் தேவை... போர்டு வைத்து ஜெயிலை வாடகைக்கு விடும் நெதர்லாந்து

குற்றச் செயல்கள் குறைந்து போன நிலையில், சிறைகளை வாடகைக்கு விட்டுள்ளது நெதர்லாந்து அரசு.

By Devarajan
Google Oneindia Tamil News

ஆம்ஸ்டர்ம்: கைதிகளின் எண்ணிக்கை குறைந்து போன நிலையில், நெதர்லாந்து அரசு, சிறைச்சாலைகளை அருகில் உள்ள மற்ற நாடுகளுக்கு வாடகைக்கு விட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் குற்றச்செயல்களில் ஈடுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதால் அந்நாட்டின் சிறைகள், கைதிகள் இல்லாமல் காற்றாடி வருகின்றன. இதனால், சிறை வளாகத்தைப் பல்வேறு பணிகளுக்கு அரசு பயன்படுத்தி வருகின்றது. அப்படி இருந்தும் சிறை காலியாக இருக்கிறது.

Netherlands has surplus of unused cells, other countries hiring

முன்னாள் பெண்கள் சிறைச்சாலை ஒன்று, தற்போது பல விருதுகளை பெற்ற உணவு விடுதியாகச் செயல்படுகின்றது. அந்நாட்டில் உள்ள பிரேடா சிறைச்சாலையில் கிட்டத்தட்ட 90 அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

2014 ம் ஆண்டு முதல் நெதர்லாந்தில் குற்றங்கள் பெருமளவு குறைக்கப்பட்டு குற்றவாளிகள் இல்லாத காரணத்தால் 27 சிறைடச்சாலைகள் மூடப்பட்டுள்ளன. அவற்றில் 6 சிறைச்சாலைகள் 17 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வாடகை சிறை வாய்ப்பை நார்வே மிகச் சரியாகப் பயன்படுத்தி, ஒட்டுமொத்தமாக ஒரு சிறைச்சாலையை வாடகைக்கு எடுத்துள்ளது. அதே போல பெல்ஜியம், பிரிட்டன், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் தங்கள் நாட்டு கைதிகளை நெதர்லாந்து கொண்டு செல்வது குறிப்பிடத்தக்கது.

English summary
Netherlands has surplus of unused cells that it has rented some of its prisons to Erope countries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X