For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”நைட் ஷிப்ட்” பறவையா நீங்கள்? - உங்களுக்கு மார்பக புற்றுநோய் வரலாம்... ஜாக்கிரதை!

Google Oneindia Tamil News

லண்டன்: அலுவலகங்களில் தொடர்ச்சியாக இரவுப் பணி புரிபவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு புற்றுநோய் வருகின்ற அபாயம் அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.

ஸ்பெயினிலுள்ள பார்சிலோனாவை சேர்ந்த பம்புவா பேப்ரா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இரவுப் பணி புரிபவர்களுக்கு டெக்ஸ்டோஸ்டிரான், ஈஸ்ட்ரோஜன் ஆகிய செக்ஸ் ஹார்மோன்கள் அளவுக்கு அதிகமான அளவில் சுரப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Night shifts linked to increased breast cancer risk

பொதுவாக காலை 6 மணி முதல் 10 மணி வரை சுரக்கும் ஹார்மோன்கள் நைட் ஷிப்ட்டில் பணிபுரிபவர்களுக்கு இரவு 10 மணி முதல் 2 மணி வரை அதிகளவில் சுரப்பது தெரியவந்துள்ளது.

இதனால் நைட் ஷிப்ட் வேலை பார்ப்பவர்களுக்கு மார்பகம், புரோஸ்டேட் கேன்சர் தாக்கும் ஆபத்து அதிகம் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெண்களுக்கே இதன் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக அதிர்ச்சி தெரிவித்துள்ளது அந்த ஆய்வு. இதனால் பெண்கள் இரவு நேரப் பணிகளைக் குறைத்துக் கொள்ளுதல் நல்லது என்றும் அந்த ஆய்வு அறிவுரை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
"Irregular sleeping patterns have been 'unequivocally' shown to lead to [breast] cancer in tests on mice, a study suggests," BBC News reports.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X