For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலகின் சிறந்த கல்வி நிறுவங்கள்: 200க்கு மேல் தள்ளப்பட்ட இந்தியா ஐஐடிக்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

லண்டன்: உலக தரத்திலான கல்வி நிறுவனங்களின் பட்டியலில் முதல் 200 இடங்களில் இந்திய கல்வி நிறுவனங்கள் ஒன்று கூட இடம்பெறவில்லை. அதேசமயம் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் முன்னணியில் உள்ளன.

உலகம் முழுவதும் உள்ள 31 நாடுகளைச் சேர்ந்த 700 பல்கலைக்கழகங்களின் ரேங்க் பட்டியல் நேற்று லண்டனில் வெளியிட்டப்பட்டது.

அமெரிக்கா பல்கலைக்கழகம்

அமெரிக்கா பல்கலைக்கழகம்

அதில், அமெரிக்காவிலுள்ள மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்தின் ஹார்வேர்டு பல்கலைக்கழகம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவின் ஸ்டேன் போர்டு, கால்டெக், பிரின்சிடென், யேல் பல்கலைக்கழகங்கள் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளன.

200 சிறந்த கல்வி நிறுவனங்கள்

200 சிறந்த கல்வி நிறுவனங்கள்

அமெரிக்காவின் 51 கல்வி நிறுவனங்கள், இங்கிலாந்தின் 29 நிறுவனங்கள், ஜெர்மனியின் 13 நிறுவனங்கள், நெதர்லாந்தின் 11 நிறுவனங்கள், கனடாவின் 10 நிறுவனங்கள், ஜப்பானின் 10 நிறுவனங்கள் மற்றும் ஆஸ்திரேலியாவின் 8 கல்வி நிறுவனங்கள் முதல் 200 இடங்களுக்குள் தேர்வாகியுள்ளன.

மும்பை ஐஐடி

மும்பை ஐஐடி

இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு கல்வி நிறுவனம் கூட 200வது இடங்களுக்குள் வரவில்லை. மும்பை ஐ.ஐ.டி. 222வது இடத்தையும், டெல்லி ஐ.ஐ.டி. 235 இடத்தையும், கான்பூர் ஐ.ஐ.டி. 300வது இடத்தையும், சென்னை ஐ.ஐ.டி. 322வது இடத்தையும் பிடித்துள்ளது.

கொல்கத்தா பல்கலைக்கழகம்

கொல்கத்தா பல்கலைக்கழகம்

டெல்லி பல்கலைக்கழகம், ரூர்சி ஐ.ஐ.டி., கவுகாத்தி ஐ.ஐ.டி., மும்பை பல்கலைக்கழகம், கொல்கத்தா பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், புனே பல்கலைக்கழகம் ஆகியவை 400வது இடத்திற்கு கீழ் வந்துள்ளன.

கல்வி நிறுவனங்களில் தரம்

கல்வி நிறுவனங்களில் தரம்

ஆராய்ச்சி, கற்பித்தல், வேலை வாய்ப்பு மற்றும் சர்வதேச தரம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து கல்வி நிறுவனங்களின் தரம் கணக்கிடப்படுகிறது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்

உலகில் உள்ள பணக்கார கல்வி நிறுவனங்களை காட்டிலும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தரமான ஆய்வு நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

English summary
Six of the 10 top universities were American, with MIT taking top honors, and the remaining four were British, the QS World University Rankings said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X