For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூடுதல் பலத்துடன் வந்த வட கொரியா! திடீரென ஏவுகணை சோதனை.. அதிர்ச்சியடைந்த அண்டை நாடுகள்

Google Oneindia Tamil News

டோக்யோ: கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கி அழிக்கும் புதிய ஏவுகணையை வடகொரியா இன்று சோதனை செய்து உள்ளதாக ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.

Recommended Video

    அடங்காத North Korea..மீண்டும் ஆபத்தான Missile Test | Oneindia Tamil

    கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி மற்றும் மார்ச் 4 ஆம் தேதி ஏவுகணை சோதனை ஒன்றை நடத்திய வட கொரியா, உளவு செயற்கைக்கோளை விண்ணில் அமைப்பதற்காக அது செலுத்தப்பட்டதாக கூறியது.

    வேலூர் பாலியல் வழக்கில் 5 பேர் கைது, 3 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்! ஆன்லைனிலும் புகார் தர ஏற்பாடுவேலூர் பாலியல் வழக்கில் 5 பேர் கைது, 3 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்! ஆன்லைனிலும் புகார் தர ஏற்பாடு

    இதுகுறித்து தெரிவித்த அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமான பெண்டகன், வட கொரியா நடத்தி இருக்கும் சோதனை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை போல் இருப்பதாக சந்தேகித்தது.

    அன்றே எச்சரித்த அமெரிக்கா

    அன்றே எச்சரித்த அமெரிக்கா

    பெண்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவிக்கையில், "வட கொரியா 5,500 கிலோ மீட்டர் தூரம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தினால், அது அமெரிக்காவை தாக்கும். அவை அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்டவை. வட கொரியா இதை விண்வெளி ஏவுகணை தளம் போல் காட்டுகிறது. இதற்கு அமெரிக்கா சார்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறோம். இதன் மூலம் வடகொரியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி இருக்கிறது. வட கொரியாவின் ஏவுகணை சோதனை பதற்றங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பை சீர்குலைக்கும் வகையில் உள்ளது." என கண்டித்தார்.

    ஜப்பான், தென் கொரியா தகவல்:

    ஜப்பான், தென் கொரியா தகவல்:

    இந்த நிலையில், இன்று சக்திவாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வட கொரியா சோதனை செய்துள்ளதாக ஜப்பானும் வட கொரியாவும் தெரிவித்துள்ளன. வட கொரியா ஏவிய ஏவுகணை ஒரு மணி நேரத்தில் 1,100 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்து வந்து தங்கள் நாட்டின் கடலில் விழுந்ததாக ஜப்பான் தெரிவித்து இருக்கிறது.

    சக்திவாய்ந்த ஏவுகணை

    சக்திவாய்ந்த ஏவுகணை

    கடைசியாக வடகொரியா கடந்த 2017 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக ஏவுகணை சோதனை மேற்கொண்டது. அதன் பின்னர் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் நடந்த பேச்சுவார்த்தையால் வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது வடகொரியா சோதனை செய்திருக்கும் ஏவுகணை 5 ஆண்டுகளுக்கு முன் அது பயன்படுத்திய ஏவுகணையை காட்டிலும் நவீன வடிவமைப்புடன் சக்திவாய்ந்ததாகவும் 6,000 அடி உயரம் வரை சென்றதாகவும் ஜப்பான் கூறியுள்ளது.

    அச்சுறுத்தும் வட கொரியா

    அச்சுறுத்தும் வட கொரியா


    வட கொரியா பல ஆண்டுகளாக மேற்கொண்டு வந்த ஏவுகணை சோதனை தென் கொரியா ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தி வந்த நிலையில், தற்போது அது கையில் எடுத்துள்ள கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை அமெரிக்காவை அச்சுறுத்தி இருக்கிறது. வல்லரசுகளாக கருதப்படும் அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளிடம் மட்டுமே இருக்கும் கண்டம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வட கொரியா சோதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

     வடகொரியாவிடம் உள்ள ஏவுகணைகள்:

    வடகொரியாவிடம் உள்ள ஏவுகணைகள்:

    வட கொரியா வசம் உள்ள வாசாங் 15 என்ற ஏவுகணை 13,000 கி.மீ, தொலைவில் சென்று தாக்கும் திறன் கொண்டது. வாசாங் 14 ஏவுகணை 10,4000 கி.மீ, வாசாங் 12 - 4,500 கி.மீ. என நெடுந்தூரம் தாக்கும் பல ஏவுகணைகளை வட கொரியா தன் வசம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Japan and South africa has told North Korea has tested a new intercontinental ballistic missile. கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கி அழிக்கும் புதிய ஏவுகணையை வடகொரியா இன்று சோதனை செய்து உள்ளதாக ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X