For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கவுதமாலாவின் பகாயா எரிமலையும் சீற தொடங்கியது.. விமான நிலையம் மூடல்.. மக்கள் வெளியேற்றம்!

கவுதமாலாவின் பகாயா எரிமலையும் சீற தொடங்கியது.. விமான நிலையம் மூடல்

Google Oneindia Tamil News

கவுதமாலாசிட்டி: கவுதமாலாவின் பகாயா எரிமலையும் சீற தொடங்கியுள்ளதால் அங்குள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

கவுதமாலா நாட்டில் தலைநகர் கவுதமாலா சிட்டிக்கு அருகே அமைந்துள்ள பியூகோ எரிமலை கடந்த ஜூன் 3ந்தேதி திடீரென்று வெடித்து சிதறியது. இதில் இருந்து வெளியேறிய லாவா 700 டிகிரி செல்சியஸ் வெப்பத்தினை கொண்டிருந்தது.

இதனை தொடர்ந்து ஏற்பட்ட கரும்புகை மற்றும் சாம்பலானது தலைநகர் உள்பட பிற பகுதிகளுக்கு பரவியது. இதில் பல கிராமங்கள் புதைந்தன. அங்குள்ள வீடுகள், மரங்கள் மற்றும் வாகனங்கள் ஆகியவை சாம்பலால் மூடப்பட்டன.

100 பேர் பலி

100 பேர் பலி

இந்த எரிமலை வெடிப்பால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200 பேர் வரை மாயமாகியுள்ளனர்.

மேலும் ஒரு எரிமலை

மேலும் ஒரு எரிமலை

இந்த நிலையில், கவுதமாலா தலைநகருக்கு 48 கி.மீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு எரிமலையான பகாயா சீற தொடங்கியுள்ளது. இதனால் 11 ஆயிரத்து 483 அடிக்கு சாம்பல் மற்றும் வாயுக்கள் வெளியேற வருகிறது.

விமான நிலையம் மூடல்

விமான நிலையம் மூடல்

இந்த எரிமலை இன்னும் சில நாட்களில் தனது லாவா வெளியேற்றத்தினை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் லா ஆரோரா சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டு உள்ளது.

மக்கள் வெளியேற்றம்

மக்கள் வெளியேற்றம்

மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பலர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

English summary
One more valcano has started to erupt in Gauthamala. The International airport la arora has been closed due to valcano eruption.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X