இந்தக் கல்யாணத்தை பத்தி என்ன நினைக்கிறீங்க.. தன் சொந்த திருமணத்தில் கூட வேலை பார்த்த ரிப்போர்ட்டர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தன் சொந்த திருமணத்தில் கூட வேலை பார்த்த ரிப்போர்ட்டர்- வீடியோ

  இஸ்லாமாபாத்: பொதுவாகப் பத்திரிக்கையாளர்கள் அதிக நேரம் வேலை பார்ப்பார்கள். நேரம், காலம் பார்க்காமல் மக்களிடம் செய்தியை சேர்க்கத் தீவிரமாக உழைப்பார்கள்.

  அந்த வகையில் பாகிஸ்தானில் பத்திரிக்கையாளர் ஒருவர் தன் திருமணத்திலேயே பேட்டி எடுக்கும் வேலையைப் பார்த்து இருக்கிறார். அங்கு இருக்கும் தன் மனைவியிடம் பேட்டி எடுத்துள்ளார்.

  அதன்பின் அங்கு இருக்கும் எல்லோரிடமும் பேட்டி எடுத்துள்ளார். இது வீடியோவாக வெளியாகி இருக்கிறது.

  யார்

  யார்

  அந்தப் பத்திரிக்கையாளர் பெயர் ஹனான் புகாரி. அவர் பாகிஸ்தானின் முக்கிய சேனல்களில் ஒன்றான சிட்டி 41 சேனலில் வேலை பார்க்கிறார். தன்னுடைய திருமணத்தை வித்தியாசமாக நடத்தத் திட்டமிட்டு இந்தச் செயலில் ஈடுபட்டு இருக்கிறார்.

  முதல் கேள்வி

  இது அந்த சேனலில் வெளியாகி இருக்கிறது. முதலில் அவர் தன் மனைவியிடம் கேள்வி கேட்டு இருக்கிறார். ''சொல்லுங்கள் இந்தக் கல்யாணத்தை பத்தி என்ன நினைக்கிறீங்க?'' என்று பேட்டி எடுத்துள்ளார். சேனல் மைக்கை கையில் வைத்துப் பேசியுள்ளார்.

  திடுக் பதில்

  திடுக் பதில்

  பலருக்கும் தெரியாத பதிலை அவர் மனைவி இதில் குறிப்பிட்டுள்ளார். புகாரி தன் பின் எப்படி எல்லாம் சுற்றினார் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்கள் திருமணம் காதல் திருமணம் என்பதே பல உறவினர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது.

  எல்லாரும்

  அதோடு இல்லாமல் அவர் தன் குடும்பத்தில் இருந்தவர்களையும் பேட்டி எடுத்துள்ளார். எப்படி இந்த ஜோடி இருக்கிறது என்று யாரையோ விசாரிப்பது போல விசாரித்துள்ளார். இந்த வீடியோ அனைத்தும் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Pakistani reporter works in his own wedding and asks questions to his wife and family. The video of this function got viral in social media.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற