For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க கோடை விழாவில் அசத்திய தமிழர் பறையிசையும் ஒயிலாட்டமும்!

By Shankar
Google Oneindia Tamil News

ரெட்மாண்ட்(யு.எஸ்): மைக்ரோசாஃப்ட் நிறுனத்தின் தலைமையிடம் அமைந்துள்ள, சியாட்டல் மாநகரப் பகுதியில் உள்ள ரெட்மாண்ட் நகர கோடை விழாவில் பறையிசையும் ஒயிலாட்டமும் பார்வையாளர்களின் கரகோஷத்தைப் பெற்றது.

Parai Isai at US Summer festival

ரெட்மாண்ட் நகரில் டெர்பி டேஸ் என்ற பெயரில் கோடைவிழா 76 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 1940 ஆம் ஆண்டு பைக்குகளின் அணிவரிசையுடன் ஆரம்பமான இந்த விழா, தற்போது ஊர்வலம், போட்டிகள், விளையாட்டுகள், பழைய கார்களின் அணிவகுப்பு, கலைப்பொருட்கள் , இசைக் கச்சேரி, உணவுக் கடைகள் என்று பன்முக விழாவாக மாறிவிட்டது.

சனி ஞாயிறு என்று இரண்டு நாட்களாக நடைபெற்ற கோடை விழாவில் இரண்டாம் நாள் மாபெரும் அணிவகுப்பு நடைபெற்றது.

Parai Isai at US Summer festival

உள்ளூர் இசைக் கலைஞர்கள், நடனக்கலைஞர்கள் பெருமளவில் பங்கேற்ற இந்த அணிவகுப்பு, சியாட்டல் தமிழ் கிராமியக் கலைக்குழு முதன் முறையாக இடம்பெற்றது. ஸ்டார் கலைக்குழு என்று அழைக்கப்படும் இந்த குழுவில் இருபதுக்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர். அனைவரும் உயர் பதவியில் இருக்கும் சாஃப்ட்வேர் வல்லுனர்கள்.

பழைய மரபு சார்ந்த இசை மற்றும் நடனங்களை அமெரிக்கர்களுக்கும் அறிமுகப்படுத்தி, தமிழர் வரலாற்றை உலகறிச்செய்ய வேண்டும் என்று நோக்கத்துடன் தாங்கள் இந்தக் குழுவை ஆரம்பித்ததாக ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் கூறினார்.

Parai Isai at US Summer festival

"ஆனால், தொடர்ந்த பயிற்சிகளுக்கு பிறகு அனைவரும் ஒன்றிப்போய், தேர்ந்த கலைஞர்களாகவே மாறிவிட்டனர். வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் நிகழ்ச்சிகள் நடத்த ஆரம்பித்துள்ளோம்.

ரெட்மாண்ட் நகரின் பாரம்பரிய மிக்க கோடைவிழாவில் பங்கேற்கலாம் என்று முடிவு செய்து,அணுகிய போது மிகவும் ஆர்வத்துடன் அனுமதி அளித்தனர். ஆதித் தமிழரின் இசைக்கருவி பறை என்று அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தோம். இசைத்தும் காட்டினோம். உடன் ஒயிலாட்டம் நடனம் பற்றியும், நாம் அணியப்போகும் பாரம்பரிய உடைபற்றியும் எடுத்துக் கூறினோம்.

மிகவும் கலர்ஃபுல்லாக இருப்பதாக கூறிய விழாக் கமிட்டியினர், இது நிச்சயம் அனைவரையும் கவரும் என்றார்கள்," என்றார் ஜெயக்குமார்.

விழாக் கமிட்டியினர் கணித்தது போலவே ஊர்வலத்தின் வழி நெடுகிலும் பார்வையாளர்கள் கரகோஷத்துடன் பறையிசையும் ஒயிலாட்டத்தையும் வரவேற்றனர். பத்தாயிரம் பேர்களுக்கும் மேலாக அங்கு திரண்டு இருந்தனர். உள்ளூர் நடனக்கலைஞர்களும் பறையிசையிக்கேற்ப ஆடத் தொடங்கி விட்டனர்.

சமீபத்தில் தான் ஸ்டார் கலைக்குழுவின் முதல் பறையிசை நிகழ்ச்சி பற்றிய செய்தி ஒன் இந்தியாவில் வெளியாகி இருந்தது.

மிகக்குறுகிய காலத்திலேயே அமெரிக்க கோடை விழாவில் பங்கேற்று பாரட்டும் பெற்றுள்ள இந்த கம்ப்யூட்டர் எஞ்சினியர்களின் பாரம்பரிய கலை முயற்சி மிகவும் பாரட்டத்தக்கதாகும்.

Parai Isai at US Summer festival

இன்னும் பல்வேறு நடனங்கள், நலிந்த கலைகளை தங்கள் குழுவில் அறிமுகப்படுத்தப் போவதாக ஜெயக்குமார் தெரிவித்தார்.

அமெரிக்காவின் அனைத்து திசைகளிலும் ஏதாவது ஒரு குழு பறையிசை ஒயிலாட்டம் என்று பாரம்பரியக் கலைகளை மீட்டெடுத்து நிகழ்ச்சிகள் நடத்தி வருவது சாதாரண விஷயம் ஆகி வருகிறது.

போகிற போக்கப் பார்த்தால் தமிழ்நாட்டிற்கே வந்து தமிழகக் கலைக் குழுக்களுக்கு சரியான போட்டி கொடுப்பார்கள் போலிருக்கே!

-இர தினகர்

English summary
Tamil's Parai Isai and Oyilattam were performed in US Summer Festival at Redmond.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X