For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேன்சருடன் போராடும் சிறுவன்: ஒலிம்பிக் மெடலை ஏலம் விட்ட போலந்து வீரர்

By Siva
Google Oneindia Tamil News

வார்சா: போலாந்தை சேர்ந்த வட்டு எறியும் வீரர் பியோடர் மாலாசோவ்ஸ்கி புற்றுநோயால் அவதிப்படும் சிறுவனுக்கு உதவ தனது ஒலிம்பிக் பதக்கத்தை ஏலத்தில் விட்டுள்ளார்.

Polish Olympian Auctions Rio Olympics Silver Medal To Save Boy Battling Cancer

போலாந்தை சேர்ந்தவர் பியோடர் மாலாசோவ்ஸ்கி(33). வட்டு எறியும் வீரர். 2008 மற்றும் கடந்த 21ம் தேதி நிறைவடைந்த ஒலிம்பிக் போட்டிகளில் வட்டு எறிதலில் வெள்ளிப் பதக்கங்கள் வென்றுள்ளார்.

இந்நிலையில் ஓலக் என்ற சிறுவனின் தாய் பியோடருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். ஓலக்கிற்கு கண்ணில் புற்றுநோய் இருப்பதாகவும், இரண்டு ஆண்டுகளாக நோயுடன் போராடும் அவனுக்கு நியூயார்க்கில் சிகிச்சை அளிக்க உதவுமாறும் அவர் அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.

இதையடுத்து ரியோ ஒலிம்பிக்கில் தான் வாங்கிய வெள்ளிப் பதக்கத்தை ஏலத்தில் விட்டு வரும் பணத்தை சிறுவனக்கு அளிக்க பியோடர் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நான் ரியோவில் தங்கத்திற்காக போராடினேன். தற்போது அதை விட விலை மதிக்க முடியாத ஒன்றுக்காக போராடுமாறு அனைவரையும் அழைக்கிறேன் என்று பியோடர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பியோடர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

நீங்கள் எனக்கு உதவினால், என் வெள்ளிப் பதக்கம் ஓலக்கிற்கு தங்கத்தை விட விலை மதிப்பதற்றதாகும் என்று தெரிவித்துள்ளார். அவரது ஃபேஸ்புக் போஸ்ட்டை பார்த்துவிட்டு பதக்கத்தை வாங்க பலர் முன்வந்துள்ளனர்.

English summary
Polish discuss thrower Piotr Malachowski has auctioned his Rio Olympic silver medal to help a kid battling with cancer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X