For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவுக்கும், மகள் மாலியாவுக்கும் ஒருசேர ‘ஹேப்பி பர்த்டே’ சொன்ன ஒபாமா!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க சுதந்திர தினத்தன்று தான், அந்நாட்டு அதிபர் ஒபாமாவின் மூத்தமகள் மாலியாவிற்கும் பிறந்தநாள். எனவே, வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் நாட்டிற்கும், தன் மகளுக்கும் ஒபாமா தனது பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பாடலாகப் பாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

கடந்த 1776ம் ஆண்டு ஜூலை 4ம் நாள் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து அமெரிக்கா விடுதலை பெற்றது. எனவே ஆண்டுதோறும் ஜூலை 4ம் தேதி அமெரிக்காவின் சுதந்திர தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த 4-ம் தேதி அமெரிக்க சுதந்திர தினம் அந்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, வாஷிங்டன் நகரில் உள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் பராக் ஒபாமா தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற சுதந்திர தினவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அப்போது, அமெரிக்கா சுதந்திர நாடாக பிறந்ததை நினைவு கூறும் வகையில் மைக்கில், ‘ஹேப்பி பர்த்டே' பாடலைப் பாடினார் ஒபாமா.

பின்னர் தனது மூத்த மகள் மாலியாவை தனதருகில் அழைத்த ஒபாமா, மீண்டும் ஒருமுறை ஹேப்பி பர்த்டே பாடலைப் பாடினார். காரணம் அன்றைய தினம் மாலியாவின் பிறந்தநாள் ஆகும்.

இதனால், மாலியாவின் பிறந்தநாள் அரசு விழா போல் காட்சியளித்தது. ஒபாமா வாழ்த்துப் பாடல் பாடியதும், அவரது அன்பில் நெகிழ்ந்து அவரது தோளில் சாய்ந்து கொண்டு சிரித்தார் மாலியா.

இணையத்தில் வெளியான இந்த வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

English summary
President Barack Obama publicly wished his oldest daughter Malia Obama a "happy birthday" on Monday, as she turned 18 on Independence Day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X