என்னாச்சு.. திடீரென போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா! ஆனால் 36 மணி நேரத்திற்கு மட்டுமே! ஏன் தெரியுமா?
மாஸ்கோ: நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா போரை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய இந்த போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் தற்போது போர் 36 மணி நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் தலைமையில் செயல்பட்டு வரும் நேட்டோ படையில் உக்ரைன் இணைய கடந்த ஆண்டு ஒப்புதல் தெரிவித்தது. ஆனால் இதற்கு ரஷ்யா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. ஏனெனில் உக்ரைன் நேட்டோவில் இணைந்துவிட்டால் அதன் படைகள் உக்ரைனில் நிலை நிறுத்தப்படும். இது ரஷ்யாவுக்கு நேரடியான அச்சுறுத்தலாகும். ஏற்கெனவே ரஷ்யாவுக்கும் ் ஏழாவது பொருத்தம் இருக்கும் நிலையில் இந்த முடிவை ரஷ்யா ஏற்கவில்லை.
அதேபோல உக்ரைன் ஒரு கட்டத்தில் சோவியத் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்தது. அது உடைந்த பின்னர் தனி நாடாக அறிவித்துக்கொண்டது. இதனையடுத்து இங்கு தனது பலத்தை காட்ட அமெரிக்கா முயன்று வருகிறது. முன்னதாக சோவியத் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தில் இனி அமெரிக்கா கிழக்கு நோக்கி முன்னேற கூடாது என்று சொல்லப்பட்டது. இதற்கு அமெரிக்காவும் ஒப்புக்கொண்டது.

நேட்டோ
ஆனால் தற்போது நார்வே தொடங்கி துருக்கி வரை தற்போது நேட்டோவின் பிடியில் வந்துள்ளன. இப்போது உக்ரைனும் வந்துவிட்டால் ஐரோப்பா முழுவதும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும். ஆனால் தற்போது இதற்கு ரஷ்யா முட்டுக்கட்டை போட்டுள்ளது. ஆனால் அமெரிக்கா உக்ரைனுக்கு தொடர்ந்து உதவி வருகிறது. அமெரிக்கா மட்டுமல்லாது பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை செய்து வருகிறது. இப்போரின் தொடக்கத்தில் ரஷ்யாவின் கை ஓங்கி இருந்தாலும், தற்போது உக்ரைன் நேட்டோ நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவை தீரமாக எதிர்த்து வருகின்றன.

உதவி
சமீபத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த பயணத்தின் போது உக்ரைனுக்கு அமெரிக்கா கூடுதலாக ரூ.70 ஆயிரம் கோடியை ஒதுக்கியது. தற்போதுவரை ரூ.18 லட்சம் கோடி அளவுக்கு உதவிகளை அமெரிக்கா உக்ரைனுக்கு செய்திருக்கிறது. இது ரஷ்யா தனது பாதுகாப்புத்துறைக்கு செலவிடும் தொகையில் 30 சதவிகிதமாகும். போரில் தற்போது வரை இரண்டு தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் முயற்சியை மேற்கொண்டுள்ளன.

கிறிஸ்துமஸ்
இந்நிலையில்தான் ரஷ்யா முதன் முறையாக போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதாவது 'ஆர்தோடக்ஸ் கிறிஸ்மஸ்' கொண்டாட்டத்தையொட்டி 36 மணி நேரம் போரை நிறுத்துவதாக அறிவித்தது. இந்த பழங்கால கிறிஸ்துமஸ் பண்டிகை ரஷ்யா மற்றும் உக்ரைன் என இரு நாடுகளிலும் சிறப்பாக கொண்டாடப்படும். எனவே மக்கள் தேவாலயங்களுக்கு சென்று வருவதற்கு ஏதுவாக இந்த போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. வழக்கமாக டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் ஜனவரி 7ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது.

சந்தேகம்
ஆனால் இந்த போர் நிறுத்த அறிவிப்புக்கு உக்ரைன் சந்தேகம் தெரிவித்திருக்கிறது. ரஷ்யாவின் இந்த அறிவிப்பு ஒரு பாசாங்கு நடவடிக்கை என்றும், தங்கள் நாட்டில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ரஷ்ய படைகள் திரும்ப பெற்றால்தான் உண்மையான போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாக அர்த்தம் என்றும் உக்ரைன் கூறியிருக்கிறது. ரஷ்யாவின் அறிவிப்பின்படி இன்று காலை 9மணி முதல் நாளை இரவு 9 மணி வரை உக்ரைனின் எந்த பகுதி மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தாது. இந்த அறிவிப்புக்கு வரவேற்பளித்துள்ள உலக நாடுகள் நிரந்தரமாக போரை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications