For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தோல்வி அடைந்த அமெரிக்க திட்டம்.. இந்தியா - சீனா சண்டையில் கால் வைக்கும் புடின்.. ரஷ்யாவின் பிளான்!

Google Oneindia Tamil News

மாஸ்கோ: இந்தியா சீனா இடையே எல்லையில் சண்டை நடக்கும் நிலையில் ரஷ்யா இரண்டு நாடுகளையும் ஆலோசனைக்கு அழைத்து இருப்பது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்தியா சீனா இடையே எல்லையில் நடக்கும் பிரச்சனைகளை உலக நாடுகள் எல்லாம் கவனிக்க தொடங்கி உள்ளது. அதிலும் ரஷ்யா, அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகள் இந்த பிரச்னையை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இந்த சண்டையில் அமெரிக்கா, இந்தியாவிற்குதான் இதுவரை ஆதரவாக பேசி வருகிறது. எல்லையில் சீனா அத்துமீறி அமைதியை குலைத்து வருகிறது என்று அந்நாட்டு துணை அதிபர் மைக் பாம்பியோவே குறிப்பிடும் நிலைமை கூட ஏற்பட்டது.

சீனாவின் பிளான் 2049.. தடங்கலாக நின்ற இந்தியா.. திடீர் தாக்குதலுக்கு இதுதான் காரணம்.. பகீர் பின்னணி!சீனாவின் பிளான் 2049.. தடங்கலாக நின்ற இந்தியா.. திடீர் தாக்குதலுக்கு இதுதான் காரணம்.. பகீர் பின்னணி!

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இரண்டு நாட்டு பிரச்னையை தீர்ப்பதாக கூட அந்நாட்டு அதிபர் தெரிவித்து இருந்தார். இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் நடக்கும் பிரச்னையை தீர்த்து வைப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். அதாவது எல்லையில் தற்போது நடந்து வரும் பிரச்னையை சரி செய்ய தயாராக இருக்கிறோம். இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டால் அவர்களிடையே பேசி, சமாதானம் செய்து, மத்தியசம் பேச தயாராக இருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

இல்லை

இல்லை

ஆனால் இதை இந்தியா தொடக்கத்திலேயே மறுத்துவிட்டது. இது எங்கள் நாட்டு பிரச்சனை. இதை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று இந்தியா உறுதியாக கூறிவிட்டது. அதேபோல் இன்னொரு பக்கம் சீனாவும் அமெரிக்காவின் மத்தியச கோரிக்கையை மறுத்தது. அமெரிக்காவின் பேச்சுவார்த்தை எல்லாம் தேவையில்லை, அமெரிக்கா முதலில் உள்நாட்டு சண்டையில் கவனம் செலுத்தட்டும் என்று சீனா கூறிவிட்டது.

அமெரிக்கா தோல்வி

அமெரிக்கா தோல்வி

இரண்டு நாட்டு பிரச்சனையில் உள்ளே புகுந்து பேசலாம். இதன் மூலம் ஆசியாவின் இரண்டு நாடுகளை கட்டுப்படுத்தலாம். ஆசியாவிற்குள் கால் வைக்கலாம் என்று அமெரிக்கா கனவு கண்டது. ஆனால் இதை இரண்டு நாடுகளும் மறுத்துவிட்டது. அமெரிக்காவின் தோல்வி அடைந்த அதே பிளானை தற்போது ரஷ்யா கையில் எடுத்துள்ளது. இதில் ரஷ்யா தொடக்கத்திலேயே வெற்றியை ருசிக்க தொடங்கி உள்ளது.

என்ன கூட்டம்

என்ன கூட்டம்

இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையே வரும் ஜூன் 22ம் தேதி முக்கியமான ஆலோசனை கூட்டம் நடப்பதாக இருந்ததது. வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இந்த ஆலோசனை நடக்க இருந்தது. ஆனால் இதில் எல்லை பிரச்சனை குறித்து ரஷ்யா பேச கூடாது. அது இரண்டு நாட்டு பிரச்சனை, அதை மூன்று நாட்டு மீட்டிங்கில் பேச கூடாது என்று இந்தியா கூறியது.

மறுப்பு

மறுப்பு

அதன்பின்தான் லடாக் மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். லடாக் பிரச்சனை காரணமாக இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இந்தியா மறுத்தது. ரஷ்யாவின் அழைப்பின் பெயரில் இந்த மீட்டிங் நடக்க இருந்தது. ஆனால் இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்தது. இதனால் மீட்டிங் மொத்தமாக ரத்து செய்யப்படும். வேறு நாளுக்கு ஒத்திவைக்கப்படும் என்று செய்திகள் வெளியானது.

தீவிர பேச்சு

தீவிர பேச்சு

ஆனால் ரஷ்யா தரப்பு இது தொடர்பாக இந்தியாவிடம் தீவிரமாக பேசியது. இந்த மீட்டிங்கில் இந்தியா கலந்து கொள்வது மிக முக்கியம். மூன்று நாடுகளும் சேர்ந்து ஆலோசனை செய்வது மிக முக்கியம். இது மூன்று உறவில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை செய்யும் என்று ரஷ்யா தொடர்ந்து கூறியது. நட்பு ரீதியாக ரஷ்யா தொடர்ந்து இந்தியாவிற்கு அழுத்தம் கொடுத்தது.

என்ன முடிவு

என்ன முடிவு

இந்த நிலையில் ரஷ்யாவின் கோரிக்கையை இந்தியா ஏற்றுக்கொண்டது. அதாவது சீனா கலந்து கொள்ளும் ரஷ்யாவுடனான ஆலோசனையில் கலந்து கொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது. லடாக் சண்டைக்கு இடையிலும் இந்த ஆலோசனை நடக்க உள்ளது.இதன் மூலம் இந்தியா - சீனா சண்டையை தீர்க்கலாம் என்று ரஷ்யா நினைக்கிறது. அதேபோல் இந்தியா - சீனா மீது ஆதிக்கம் செலுத்தலாம் என்றும் ரஷ்யா நினைக்கிறது.

எப்போது மீட்டிங்

எப்போது மீட்டிங்

இந்திய - ரஷ்யா - சீனா கூட்டமைப்பு RIC (Russia-India-China) என்று அழைக்கப்படுகிறது. இந்த மூன்று நாடுகள் சந்திப்பது எப்போதும் உலக அளவில் அதிக முக்கியத்துவம் பெற கூடியது ஆகும். இந்த நிலையில் ரஷ்யாவின் அழைப்பில் பெயரில் இந்த மீட்டிங் நடக்க உள்ளது. இந்தியா சார்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் இந்த மீட்டிங்கில் கலந்து கொள்கிறார். வரும் 26ம் தேதி இந்த மீட்டிங் நடக்கிறது.

English summary
Russia - India - China meet may be a turning point in Beijing - Delhi fight over Ladakh region.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X