Russia:புதினின் வலதுகரம்.. ரஷ்யாவின் ராணுவ அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு! உடலை துளைத்த குண்டுகள்
மாஸ்கோ: ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் லெப்டினன்ட் ஜெனரல் விளாடிமிர் அலெக்ஸீவ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். குண்டு காயமடைந்துள்ள விளாடிமிர் அலெ க்ஸிவீவ் அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புதினின் வலதுகரம் என்று கூறப்படுகிறது.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தில் லெப்டினன்ட் ஜெனராலாக இருப்பவர் விளாடிமிர் அலெக்ஸ்வீ. இவர் தலைநகர் மாஸ்கோவில் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் இன்று அதிகாலையில் அவர் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் உயிருக்கு போராடினார்.
முதுகில் பாய்ந்த குண்டு
முதுகுப்பகுதியில் பல இடங்களில் குண்டுகள் பாய்ந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர் அவரை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிவிட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதினுக்கு நெருக்கமானவர்
இதையடுத்து உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.இந்த விளாடிமிர் அலெக்ஸ்வீ, அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புதினுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. அவரது நம்பிக்கையை பெற்றவர். புதினின் வலதுகரம் என்று அடையாளம் காணப்படுவர்களில் ஒருவராக உள்ளார்.
சிரியா விவகாரத்தில்...
இதனால் தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் ஆதரவு பெற்ற சிரியாவில் முன்னாள் அதிபர் பஷர் அல்-அசாத்தின் அரசை ஆதரிக்கும் உளவு நடவடிக்கைக்கு விளாடிமிர் அலெக்ஸ்வீ தலைமை தாங்கினார்.
வாக்னர் தலைவருடன் பேச்சு
அதுமட்டுமின்றி உக்ரைன் போருக்கு நடுவே ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினை வீழ்த்த துடித்த வாக்னர் குழு தலைவர் யெவ்கெனி பிரிகோஜினுடன் ராணுவம் கடந்த 2023ம் ஆண்டில் பேச்சுவார்த்தை நடத்தியது. அதற்கு புதின் தேர்வு செய்த நபர் இந்த விளாடிமிர் அலெக்ஸ்வீதான்.
பின்னணியில் உக்ரைனா?
ரஷ்யா தற்போது உக்ரைன் மீது போர் புரிந்து வருகிறது. இதனால் ரஷ்யாவின் ராணுவ அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல்கள் உள்ளன. சிலர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் சிலரது கொலைகளுக்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் தான் லெப்டினன்ட் ஜெனரல் விளாடிமிர் அலெக்ஸ்வீ மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது வரை இந்த சம்பவத்துக்கு யாரும் பொறுப்பேற்றகவில்லை.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications