Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஷ்யாவிற்கு விழுந்த அடி.. மத்திய ராணுவ மாவட்ட தளபதி காலி! அதிரடியாக அறிவித்த உக்ரைன்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 13வது நாளாக போர் தொடுத்து வருகிறது. கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இருப்பினும் தலைநகர் கீவ்வை கைப்பற்ற போராடி வருகிறது.

இதில் வெற்றிபெற கீவ் நகரை சுற்றி ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது. மேலும் பிற நகரங்களில் ஆங்காங்கே தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதனால் உக்ரைன், ரஷ்யா தரப்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ரஷ்யா தரப்பில் ராணுவ வீரர்களும், உக்ரைன் தரப்பில் ராணுவ வீரர்களும், அப்பாவி மக்களும் உயிரிழந்து வருகின்றனர். இதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது. ஆனாலும் ரஷ்யா போர் நடவடிக்கையை கைவிடவில்லை. இதனால் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்க உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பணம், ஆயுத உதவிகள் செய்து வருகின்றன.

ரஷ்யா கோபம்

ரஷ்யா கோபம்

இது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அதிருப்திக்குள்ளாக்கி இருக்கிறது. ஏற்கனவே உலக நாடுகளின் பொருளாதார தடையால் கோபமடைந்துள்ள அவர் உக்ரைனுக்கான ஆயுத உதவியால் கூடுதலாக கோபம் அடைந்துள்ளார். இதையடுத்து உக்ரைன் பிற நாடுகளில் இருந்து ஆயுத உதவி பெற்றால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பின்வாங்கவில்லை

பின்வாங்கவில்லை

இதனால் அவர் தனது போர் நடவடிக்கையில் இருந்து சற்றும் பின்வாங்கவில்லை. தாய்நாட்டை பாதுகாக்க உக்ரைனும் ஆக்ரோஷமாக தாக்குதலை தொடர்கிறது. இதனால் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களும், அங்கு பயிலும் பமாணவர்களும் வெளியேறி வருகின்றனர்.

தொடர் தாக்குதல்

தொடர் தாக்குதல்

இதற்கிடையே போர் நிறுத்தம் குறித்து இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பேச்சுவார்த்தை காரணமாக உக்ரைன் கீவ், செர்னிவ், சுமி, மரியூபோல் நகரங்களில் போர் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டன. இதை பொதுமக்கள் வெளியேற வசதியாக இருக்கும் என ரஷ்யா கூறியது. ஆனாலும் போர் நிறுத்தத்தின்போதும் ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது.

மேஜர் ஜெனரல் பலி

மேஜர் ஜெனரல் பலி

இந்நிலையில் கார்கிவ் நகர் அருகே நடந்த தாக்குதலில் ரஷ்யாவின் மத்திய ராணுவ மாவட்டத்தின் 41வது படைப்பிரிவின் முதலாவது துணை காமாண்டோவான மேஜர் ஜெனரல் விட்டலி ஜெராசிமோவ் நேற்று உயிரிழந்தார். இதை உக்ரைன் ராணுவ அமைச்சகத்தின் உளவுப்பிரிவு தலைமை இயக்குனர் உறுதி செய்துள்ளார். பலியான விட்டலி ஜெராசிமோவ் 2வது செச்சென் போர் மற்றும் சிரியாவில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையில் பெரும் பங்காற்றினார். இவர் ரஷ்ய ராணுவத்தில் சிறந்த அதிகாரிக்கான விருதும் பெற்றுள்ளார்.

2வது அதிகாரி

2வது அதிகாரி

முன்னதாக பிப்ரவரி இறுதியில் 41வது ராணுவ படைப்பிரிவின் துணை காமாண்டோவான ஜெனரல் அந்தரி சுகோவெட்ஸ்கி இறந்ததாக உக்ரைன் தெரிவித்திருந்தது. இதன்மூலம் ரஷ்யா தனது படையின் 2 முக்கிய அதிகாரிகளை இழந்துள்ளது. இருப்பினும் இதுகுறித்து ரஷ்யா தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவிலல்லை.

Recommended Video

    Ukraine VS Russia | கோபத்தில் இம்ரான்கான் | புதினுக்கு போன் போட்ட மோடி | Oneindia Tamil
    11 ஆயிரம் பேர்

    11 ஆயிரம் பேர்

    மேலும் போரில் இதுவரை 11 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் இறந்துள்ளதாக உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ரஷ்யா தரப்பில் 500 பேர் மட்டும் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உக்ரைனில் ஏற்பட்ட பலி குறித்து இருதரப்பிலும் இன்னும் தகவல் வெளியிடப்படாமல் உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+