ஸ்கைப், வைபர், வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.. சவுதி அரேபியா அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரியாத் : அடுத்த வாரம் முதல் சவுதியில் இணைதள வசதி மூலம் வீடியோ கால் செய்யும் வசதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக அந்த நாட்டு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜுன் மாதத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இணையதளம் வழியாக வாய்ஸ் கால், வீடியோ அழைப்பு உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த விதித்திருந்த தடையை நீக்கியது. செல்போன் பயன்பாட்டாளர்களின் தேவையை பொருத்து இந்த தடை நீக்கப்படுவதாக அறிவித்தது.

இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டை பின்பற்றி சவுதி அரேபியாவும் வாட்ஸ் அப், வைபர், ஸ்கைப் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வீடியோ கால் செய்யும் வசதிக்கு தடையை தளர்த்திக் கொள்வதாகக் கூறியுள்ளது. அந்த நாட்டின் தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைதொடர்புத் துறை அமைச்சர் அப்துல்லா அல் சவாஹா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

 தடை நீக்கம்

தடை நீக்கம்

சவுதி அரேபியாவின் கிங்டம் டெலிகாமின் தலைவராகவும் அப்துல்லா உள்ளார். அடுத்த ஒரு வாரத்தில் இணையதளம் வழியாக வாய்ஸ் கால் செய்யும் வசதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என்று கூறியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 வாடிக்கையாளர்களுக்காக

வாடிக்கையாளர்களுக்காக

வாடிக்கையாளர்களின் திருப்தி என்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கிங்டம் தொலைதொடர்பு நிறுவனம் இணையதளம் மூலம் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்யும் வசதிக்கான தடையை நீக்க ஒத்துழைப்பு அளிக்கும் என்று அப்துல்லா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதியை ஒரு வாரத்தில் சவுதி மக்களும், புலம்பெயர்ந்து வாழ்பவர்களும் பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 மகிழ்ச்சியான செய்தி

மகிழ்ச்சியான செய்தி

சவுதியின் இந்த அறிவிப்பால் பணி நிமித்தமாக சவுதி சென்றுள்ள தமிழகர்களுக்கு பயன் அளிக்கும். இணையதள வசதி இருந்தால் மட்டும் போதும் இந்தச் செயலிகளை பயன்படுத்தி இலவசமாக பேசலாம் என்பதோடு தொலைததூரத்தில் இருப்பவர்கள் வீடியோ மூலம் உறவினர்களைப் பார்த்து பேசி மகிழும் வாய்ப்பும் கிடைக்கும்.

 2010ல் தடை வந்தது

2010ல் தடை வந்தது

2010ஆம் ஆண்டு ப்ளாக்பெர்ரி தொலைபேசி வழியாக அனுப்பப்படும் குறுந்தகவல்களை கண்காணிக்க முடியவில்லை என்றும் அதனால் தீவிரவாதத்திற்கு எதிரான தமது போரில் பின்னடைவு ஏற்படும் என்றும் கூறி ப்ளாக்பெர்ரி போன்களுக்கு சவூதியில் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Saudi Arabia announced, on Wednesday, that they are lifting the ban Voice over Internet Protocol (VoIP) voice and video calling services including Skype, WhatsApp and Viber effective from next week.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற