For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முகநூலை எப்படி பயன்படுத்த வேண்டும்.. சரியான உதாரணம் ஸ்டீபன் ஹாக்கிங்!

முகநூல் பக்கம் எதற்கு என்பதை சரியான வழியில் பயன்படுத்தியவர் என்றால் அது விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் தான்

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் மரணம்!- வீடியோ

    லண்டன் : முகநூல் சாட்கள் எதற்கு என்பதை சரியான முறையில் பயன்படுத்தியவர் என்றால் அது விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் என்று சொல்லாம். வீண் அரட்டைகள், வெட்டிப் பேச்சுகளையும், தேவையில்லாத ஷேர்களையும் செய்யாமல், அறிவியல் ரீதியிலானதாக மாற்றியவர் ஸ்டீபன் ஹாக்கிங்.

    ஒரு மனிதனால் பேச முடியாது, கை, கால்கள் செயல்படாது என்றாலே அவரின் வாழ்நாள் அத்தோடு முடிந்துவிட்டது, இனி அவர் அந்த குடும்பத்திற்கு பாரம் தான் என்ற எண்ணம் தான் பலருக்கும் இருக்கும். ஆனால் இவற்றையெல்லாம் மாற்றிக் காட்டியவர் ஸ்டீபன் ஹாக்கிங்.

    21 வயதில் நரம்பு நோய் பாதிக்கப்பட்டு அன்றாட மனிதவாழ்க்கை வாழ முடியாதவராக சக்கர நாற்காலியில் முடங்கிப் போனார் ஸ்டீபன். ஆனால் முடங்கியது உடல்தானே தவிர மூளையும், சிந்திக்கும் செயல்பாடும் இல்லை என்பதை இந்த உலகில் 55 ஆண்டுகள் வாழ்ந்து காட்டியவர் ஸ்டீபன். எப்போதும் தனக்கு முன்பு இருக்கும் திரையையே பார்த்துக் கொண்டிருப்பார் ஸ்டீபன் ஏனெனில் அவரின் சிந்தனைகளை வெளிப்படுத்தும் கருவி அது தான். ஸ்டீபனின் சக்கர நாற்காலியில் வைக்கப்பட்டிருக்கும் கணினி மூலமே தனது கருத்துகளை அவர் வெளிப்படுத்த முடிந்தது.

    எப்படி பேசுவார் ஸ்டீபன்?

    எப்படி பேசுவார் ஸ்டீபன்?

    ஸ்டீபனின் சக்கர நாற்காலியில் இருக்கும் கைப்பிடியில் உள்ள பட்டனை அழுத்தினால் அதன் மூலம் வார்த்தைகளை தேர்வு செய்து, அதை ஸ்பீச் சிந்தசைசருக்கு அனுப்பினால் அது வார்த்தைகளாக வெளிப்படுத்தும். இந்த முறையை வைத்தே ஸ்டீபன் 55 ஆண்டுகள் இயற்பியல் தொடர்பான லெக்சர்கள், விளக்கங்கள் மற்றும் பிறரின் சந்தேகங்களுக்கு விளக்கமும் அளித்தார்.

    2014 முதல் முகநூலில்

    2014 முதல் முகநூலில்

    டெக்னாலஜியை பயன்படுத்தி தனது இயற்பியல் வேட்கைகளையும், கண்டுபிடிப்புகளையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தவர் ஸ்டீபன். இதோடு நின்று விடாமல் இன்று அசுர வளர்ச்சி பெற்றிருக்கும் சமூக வலைதளமான முகநூலில் 2014ம் ஆண்டில் இணைந்து இயற்பியல் ஆர்வம் உள்ளவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு அறிவு புகட்டும் நபராகவும் விளங்கினார்.

    4 பில்லியன் பேர் பின் தொடர்ந்தனர்

    4 பில்லியன் பேர் பின் தொடர்ந்தனர்

    தன்னுடைய கண்டுபிடிப்புகளுக்கான விளக்க வீடியோக்கள், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று அளித்த லெக்சர்கள் என அனைத்தையும் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். இது குறித்து சந்தேகம் எழுப்புபவர்களுக்கு தனித்தனியாக பதில் அனுப்பி அவர்களுக்கு இயற்பியல் குறித்த புரிதல்களை ஏற்படுத்தவும் ஸ்டீபன் முகநூலை பயன்படுத்தி வந்தார். அறிவியல் மற்றும் கணிதத்தில் பிரேக்த்ரோ சவால்கள், அறிவியல் ஹைக்கூ கவிதைகள், தனது அமைப்புக்கு நிதி திரட்டுதல் உள்ளிட்டவற்றையும் ஸ்டீபன் செய்துவந்துள்ளார். ஸ்டீபன் ஹாக்கிங்கை சுமார் 4 பில்லியன் பேர் முகநூலில் பின்தொடர்கின்றனர்.

    ஹைக்கூ போட்டி

    ஹைக்கூ போட்டி

    கடைசியாக 2017 டிசம்பரில் ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு பதிவை போட்டுள்ளார். அறிவியல் சார்ந்த ஹைக்கூ கவிதைப் போட்டி நடத்தியுள்ளார் ஸ்டீபன், இதில் சிறந்த ஹைக்கூ ஒன்றை தேர்வு செய்து அது தனது சிந்தனைகளை பிரதிபலிப்பதாகவும் போட்டுள்ளார், அதற்கு பிறகு ஸ்டீபன் முகநூலில் எந்தப் பதிவையும் போடவில்லை.

    English summary
    Stephen hawkings joined the social medium facebook in 2014 and used it in a right way, he had discussions about his lecture and inventions and conducted challenges, haiku competition on the basis of science throgh his fb page and connected with all.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X